Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, December 23, 2012

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர்களுக்கு அமைச்சர் பணிப்பு




கடந்த சில நாட்களாக பெய்துவந்த மழையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச் சுட்டான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கையினையெடுக்குமாறும்.அவர்களுக்கு தெவையான நிவாரண வசதிகளை தாமதமின்றி வழங்குமாறும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் முல்லை அரசாங்க அதிபர் வேதநாயகம்,ஒட்டுச் சுட்டான் பிரதேச செயலாளர் திரேஷ் குமார் ஆகியோருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பெல்ஜியம் சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான சமைத்த உணவு மற்றும் மருத்துவ வசதிகள் என்பவைகளை ஏற்படுத்தி கொடுக்குமாறும் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
பாதிப்புக்குள்ளான மக்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பு படையினர் உதவிகளை வழங்குமாறு பிரதேசத்துக்கு பொறுப்பான கட்டளையிடும் பாதகாப்பு அதிகாரிகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுள்ளார்

No comments:

Post a Comment