-
கடுமையான வெள்ளப்பாதிப்புக்குள்ளான வன்னி மாவட்ட மக்களுக்கான
நிவாரண வசதிகளுக்கு தேவையான நிதியினை அனர்த்த
முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர ஒதுக்கீடு
செய்துள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி
குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
தற்போதைய சீரற்ற கால நிலையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல குளங்கள் பெருக்கெடுத்துள்ளமை மற்றும் மல்ஓயாவின் நீர் மன்னார் மாவட்டத்தின் நோக்கி வந்தமை என்பதினால் மன்னார் மன்னார்,மாவட்டதில் மடு,முசலி,நானாட்டான்,மன்னார் நகர பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும்
அதே வேளை வெள்ளத்தால் மடு,சிலாவத்துறை பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பொருட்களை அக்கிரமங்களுக்கு எடுத்து செல்ல முடியாதுள்ள நிலையில் ,கடற்படையின் உதவியுடன் படகு மூலம் அதனை விநியோகிக்க போதுமான நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சர் பதியுதீன்,பிரதேசத்திற்கு பொறுப்பான கடற்படை பொறுப்பாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நஷ்டயீடு வழங்க தேவையான உதவிகளை நல்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த யாபா அபயவர்தனவிடம் அமைச்சர் றிசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.குறிப்பாக வன்னி மாவட்டத்தில்,மன்னார்,வவுனியா,
No comments:
Post a Comment