வன்னி மாவட்டத்தில்
முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் விருப்பத்தின் படியே தெரிவு செய்யப்பட
வேண்டும் என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான
றிசாத் பதியுதீன் அவர்களை புரந்தள்ளி எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்றும்
கூறினார்.
வன்னி வசந்தம்
என்னும் தொனிப் பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(2012.12.16) இடம் பெற்ற
அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வவுனியா அரசாங்க
அதிபர் பந்துல ஹரிச்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன்,சிவசக்தி
ஆனந்தன் உட்பட மாகாண அமைச்சின் செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள்,மக்கள் பிரதி
நிதிகள் ஆகியோர் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில்
சகல பிரதேசங்களும், எவ்வித பாகுபாடுகளுமின்றி அபிவிருத்தி செய்யப்படுகின்றன.இதில் இனம்.மதம்,பார்ப்பதில்லை,எங்கு
தேவை இருக்கின்றதோ அங்கு முன்னுரிமைபடுத்தி அபிவிருத்திகளை செய்கின்றோம்.
பிரதேசத்தில் அபிவிருத்திகளை
செய்கின்ற போது ,மக்களின் தேவைக்கு முன்னுரிமையளித்து சகல மக்கள் பிரதி நிதிகளின் கருத்துக்களையும்
உள்வாங்கி திட்டங்களை தயாரிக்க வேணடும்.இந்த மாவட்டம் இன்று அமைதியாக காணப்படுகின்றது.ஆனால்
சிலருக்கு தேவைாயகவுள்ளது, மீண்டும் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க,அதற்கு இடம் கொடுக்கமுடியாது.
இந்த நாட்டின்
ஜனாதிபதி தான் வன்னி மாவட்டத்துக்கான நிதிகளை நாம்கேட்கின்ற போதெல்லாம் ஒதுக்கித்தருகின்றார்
என்பதை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இம்மாவட்டத்தின்
மின்சாரம்,சுகாதாரம்,பாதை,கல்வி,மக்களின் வாழ்வாதார திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு
நாம் நிதிகளை வழங்கி மாவட்டத்தை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்கின்றோம்.எனவே
சகலரும் மக்களுக்கான இந்த அபிவிருத்திகளை முன்னெடுக்க உதவிகளை வழங்குங்கள் என்றும்
அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
வவுனியா மாவட்ட
பாடசாலைகளில் காணப்படும் ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்திக் உரிய நடவடிக்கையினை
எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு இங்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
No comments:
Post a Comment