முல்லைத்தீவு
பகுதியில் பெய்து வரும் கடும் மழையினையடுத்தும்,முல்லைத்தீவில் இருந்து 250 கிலோ மீற்றல்
தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் முல்லைத்தீவு கரைப்பகுதியூடாக நகரும் அறிகுறி
தென்படுவது குறித்து வானிலை அவதான நிலையம் அறிவித்ததையடுத்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு
பிரதேசங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளர் சதாசிவம்
கணகரத்தினம் சற்று முன்னர் தெரிவித்தார்.
கடும்
காற்று வீசும் நிலை காணப்படுவதால் கரையோரப் பிரதேச மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவித்த
அவர்,அவர்கள் தற்போது பாடசாலை மற்றும் பொது கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்
கூறினார்.
முல்லைத்தீவு,செம்மலை,அடம்பில்,வட்டுவான்,சிலாவத்தை
மற்றும் கள்ளப்பாடு உட்பட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இவ்வாறு இடம் பெயர்ந்துள்ளதாகவும்,இயற்கை
மாற்றங்கள் நிகழுமெனில் அம்மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண வசதிகளை செய்து கொடுப்பதற்கான
பணிப்புரையினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்
முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்,மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும்,இப்பிரதேசங்களுக்கு
சென்று திரும்பியுள்ள இணைப்பாளர் கணகரத்தினம் கூறினார்.
இதே
வேளை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்
தெரியவருகின்றது.
இதே
வேளை முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் மக்கள் பெரம் எண்ணிக்கையில் இடம் பெயர்ந்து
பதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.இன்று இரவு கடும் காற்று வீசக் கூடிய சாத்தியக் கூறுகள்
காணப்படுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம்
வேண்டுகோள்விடுத்துள்ளது.
No comments:
Post a Comment