கற்பிட்டி கண்டக்குடா கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் சடமலாக மீட்கப்பட்டுள்ளதாக
கல்பிட்டி பொலீஸார் தெரிவித்தனர்.நேற்று சனிக்கிழமை மாலை வேளையில் சிலர் கடலுக்கு குளிக்கச்
சென்றதாகவும் அவர்களை காணவில்லையென்று கற்பிட்டி பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கடற்படையின் உதவியுடன் தேடுதல் மேற்
கொண்ட போது அன்றைய தினம் மாலையே ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.மற்றொருவரை தேடும்
பணிகள் இடம் பெறுவதாக கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடுமல்கல தெரிவித்தார்.
இவ்வாறு கடலில் குளிக்கச் சென்று
பரிதாபமாக நீரில் மூழ்கி மரமானவர்கள் முஹம்மத் அஸ்கான்(வயது -17),முஹம்மத் அஸான் (வயது-19)
என பொலீஸார் மேலும் தெரிவித்தனர்.
கடலில் காணமல் போனதாக கூறப்படும் முஹம்மத்
அஸான்,இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டதாகவும்,அவர்களது
உடலங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டதாக கல்பிட்டி பொலீஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment