உலகில் அருகிவரும் கலைகளில் ஒன்றான (Hula
Hoob Acrobatic)என்னும் கலைக்கு
இலங்கையில் புத்தளத்தில் உள்ள 7 வயது
சிறுமியொரத்தி புத்துயிர் அளித்துவருவது பலரையும் கவர்ந்துள்ளது.புத்தளம் சாஹிரா
தேசிய கல்லாரியின் தரம் 3 இல் கல்வி பயிலும்,ஆமினா ரஹ்மத் தமது சுய முயற்சியினால்
இக்கலையினை வெளிப்படுத்தி வருகின்றார்.
பயிற்றுவிப்பாளர்கள் இல்லாத நிலையில் சிரச தொலைக்காட்சியில் இடம் பெறும் பொட்டன்ட
புளுவன் ரியலட்டி (சிறுவர்களுக்கும் இயலும்) என்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட
500 போட்டியாளர்களுக்குள் முதல் 12 பேர்களுக்குள் தெரிவாகி நடுவர்களையும்
வியப்பில் ஆழத்தியுள்ளார்.
திரு,திருமதி ஆஷிக் நிம்ரி தம்பதிகளின புதல்வியான இவர்,முன்னால் யாழ்
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜ.எம்.இல்யாஸ் அவர்களின் பேத்தி என்பதும்
குறிப்பிடத்தக்கது.
புத்தளத்திற்கு மாத்திரமே ஹூலா ஹூப்( Hoola Hoob)) என்ற
உடற்பயிற்சி கலை தெரியும் என்பதை,1945 ஆம் ஆண்டுகளில் வைத்தியர் ஒருவர்
அறிமுகப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் இஸ்லாமிய ஆடையுட்ன் இந்த கலை
நிகழ்ச்சிகள் நாட்டின் பல பாகங்களில் உள்ள பாடசாலைகளிலும் இதனை நிகழத்துவதற்கு
ஆமினா ரஹ்மத் தயாராகிவருகின்றார்.
No comments:
Post a Comment