மன்னார்அசம்பாவிதமும்
முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும்
(எஸ். சுபைர்தீன் -தலைவர்- அஷ்ரப் காங்கிரஸ்)
Ø வீடு நோக்கி விரைந்த அகதிகளும், வீதியில் நடந்த அனர;த்தங்களும்
Ø அகதிகளின் போராட்டம் நீதிக்காக! நீதியின்
தீர்ப்பு யாருக்காக!
Ø பாவம் ஒரு புறம் பழி மறு புறமா?
Ø உண்மைகளை எடுத்துரைக்கும் பொழுது ஒருவன்
முரண்பட்டவனாக தெரியலாம் அதற்காக உண்மைகளை மறைப்பது நயவஞ்சகத் தனமாகும்.
நயவஞ்சகனாக இருப்பதை விட முரண்பட்டவனாக இருப்பது எவ்வளவோ மேல் என்பதனால் இங்கு
உண்மைகளைக் கூற விரும்புகிறோம்.
2012 ஜூலை 18ம் திகதி மன்னார் அகதிகளின் போராட்டத்தின்
விளைவாக எழுந்த அசம்பாவிதங்கள் நோயின் அறிகுறியே அன்றி நோயின் மூல காரணம் அல்ல.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காத நிலையில் உரிமைகளும், நீதியும் மறுக்கப்பட்டு மேலும் மேலும்
பாதிப்புக்குட்படுத்தப்பட்டு மிதிக்கப்படும் பொழுது மக்களின் கிளர;ச்சிகளும், போராட்டங்களும் சுயமாகவே உருவாகும் என்பது
வரலாற்றுண்மையாகும். இதற்கு மன்னார; முஸ்லிம்கள் விதிவிலக்கல்ல.
யுத்தம் முடிந்து
இரண்டரை வருடத்துக்குள் அகதிகளான ஒரு இன மக்களுக்கு மீள்குடியேற்ற உட்கட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட நிலையில்
1990ம் ஆண்டிலிருந்து சுமார;
22 வருடமாக அகதிகளாக்கப்பட்டு, அல்லோல கல்லோலப்பட்டு சிதறுண்டு நாடோடிகளாக
அகதி முகாம்களில் தவித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களுக்கு இத்தகைய வசதிகள்
கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தினால் ஆத்திரத்தினால் ஏற்பட்ட உள்ளக்குமுறல்களின்
வெடிப்பே இந்தக் கிளர;ச்சி
எனலாம்.
மன்னார்
அசம்பாவிதத்தின் பின்னணி!
1990ம் ஆண்டு ஒரே
தாய் மொழியைப் பேசி, பொதுவான
கலாச்சார விழுமியங்களைப் பின்பற்றி காலா காலமாக ஒற்றுமையாக வாழ்ந்த பூர்வீகக்
குடிகளான வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக பலாத்காரமாகத், துப்பாக்கி முனையில் 24 மணித்தியாலயங்களுக்குள் வெறுங்கையோடு வெளியேற்றப்பட்ட
போது மன்னார; முஸ்லிம்களும்
உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டனர்.
இதன் பின்னர; வெறிச் சோடிக்கிடந்த முஸ்லிம் கிராமங்களில்
ஒன்றான உப்புக்குளத்திற்கருகிலுள்ள தோட்டவெளியில் எல்.ரி.ரி.ஈ.யினர; விடத்தல் தீவைச் சேர;ந்த ரோமன் கத்தோலிக்க மீனவர;களை எல்.ரீ.ரீ.ஈ. வலுக் கட்டாயமாகக் குடியேற்றினர்
உப்புக்குளத்திற்கு
அருகிலுள்ள கோந்தைப்பிட்டி முஸ்லிம் மீனவர;கள் தொழில் புரியும் ஒரு மீன்பிடித்துறை முகமாகும். எல்.ரி.ரி.ஈ.யால்
புதிதாகத் தோட்டவெளியில் குடியேற்றப்படட தமிழ் மீனவர;கள் கொந்தைப்பிட்டி மீன்பிடி துறைமுகத்தைத் தமது
இஷ்டப்படி பயன்படுத்தத் தொடங்கினர். இதுவே இப்பிரச்சினைக்கு முன்னோடியாகும்.
தமிழ் முஸ்லிம் மீனவர் பிரச்சினை
இது இவ்வாறு
இருக்கையில் 2002ம் ஆண்டு யுத்த
நிறுத்த சமாதான உடன்படிக்கையின் பின்பு வெளியேற்றப்பட்ட சில முஸ்லிம் மீனவக்
குடும்பங்கள் தங்களது பாரம்பரிய வதிவிடமான உப்புக் குளத்துக்கு வந்த பொழுது
தங்களின் மீன் பிடித்துறை முகம் பறியோயிருந்ததைக் கண்டு தங்களது கடும்
எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இதனால் பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்தது.
இந்தத் தமிழ்
முஸ்லிம் மீனவப் பிரச்சினையைச் சமரசப் படுத்த அப்போதைய கடற் புலிகளின் தலைவராகிய
அமுதன் தலையிட்டு இரு மீனவ சமூகங்களுக்கிடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.
இதன்படி விடத்தல்தீவு
மீன் பிடித்துறைமுகம் மீளத் திறக்கப்படும் பொழுது தமிழ், கத்தோலிக்க மீனவர;கள் உப்புக்குளம், கோந்தைப்பிட்டி ஆகிய இடங்களை விட்டுச் சென்றுவிட
வேண்டும் என்றும், தமிழ்
மீனவர்கள் உப்புக்குள முஸ்லிம் மீனவர் சங்கத்தின் அனுமதியுடன் மாத்திரமே
கோந்தப்பிட்டி மீன் பிடித்துறை முகத்தை உபயோகிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டு
கைச்சாத்திடப்பட்டது.
2005 ஜூன் 2006 நவம்பர் ஆகிய தினங்களில் கடற்றொழில் உதவி
அத்தியட்சகர், தமிழ்த் தேசிய
கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வம் அடைக்கல நாதன் அவர்கள், மீனவர்
சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்ட
கலந்துரையாடலின் போது மேற்படி துறைமுகத்தைப் பயன்படுத்தும் காலக்கெடு
மேலும் நீடிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் போது கூட கோந்தப்பிட்டி மீன்
பிடித்துறைமுகம் உப்புக்குள முஸ்லிம் மீனவர்களுக்கே சொந்தமான தெனவும், விடத்தல் தீவுத் தமிழ் மீனவர;களுக்கு மனிதாபிமான அடிப்படையிலேயே இங்கு
தொழில்புரிய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதெனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2009 மே மாதம்
யுத்தம் நந்திக் கடலில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது அகதிகளாய்
வெளியேற்றப்பட்டிருந்த ஏறக்குறைய 500 உப்புக்குள மீனவக் குடும்பங்கள் தங்கள் பாரம்பரிய வதிவிடங்களிலே
குடியேறத்துவங்கினர். இவ்வாறு மீள் குடியேறிய உப்புக்குள முஸ்லிம் மீனவர்கள்
தங்களது சொந்த மீன்பிடித்துறைமுகமான
கொந்தப்பிட்டித் துறைமுகத்தைப் பாவிக்க முடியாது தொழில் இழந்த நிலையில் அமைச்சர்
டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தனர்;. இதன் விளைவாக 2011 நவம்பர் 3ல் கடற்றொழில் உதவி அத்தயட்சகர், மன்னார் மாவட்ட மீன்பிடிச்சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட
கூட்டத்தில் விடத்தல் தீவு மீனவர;கள்
2011 நவம்பர் 30ம் திகதிக்கு முன் கொந்தப்பிட்டி துறைமுகத்தை
விட்டும் வெளியேற வேண்டுமென்றும் அத்தோடு விடத்தல்தீவு மீனவர;கள் தற்காலிகமாகப் பள்ளிமுனை, பனங்கட்டிக்காடு ஆகிய சிறு துறைமுகங்களைப்
பயன்படுத்தலாமென்றும் முடிவு செய்யப்பட்ட போதிலும் அவர;கள் அங்கிருந்து போகவில்லை.
பிரச்சினைகள்
அதிகரிக்க 2012 ஜூனில் மன்னார் உப
பொலிஸ் அத்தியட்சகர் கூட்டிய கூட்டத்தில் விடத்தல் தீவு மீனவர்கள் கோந்தப்
பிட்டியை விட்டும் திரும்பிச் செல்ல ஒப்புக் கொண்டனர்.
வாக்குறுதியளித்தபடி
விடத்தல் தீவு மீனவர்கள் வெளியேறாததால் இரு பிரிவினர்களுக்கிடையில் கை கலப்பு
ஒன்று 2012.07.13ம் திகதி
நடைபெற்றது. இதன் விளைவாக மன்னார் பொலிசாரினால் 2012.07.16ல் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டது.
2012 ஜூலை 18ம் திகதி முஸ்லிம் மீனவர;கள் சார்பாக தோன்றிய வழக்கறிஞர் “மீனவ மற்றும் கடல்படு செல்வங்கள் சட்டத்தின்” கீழ் மீனவப் பிரச்சினைகளைத் தீர;ப்பதற்கான அதிகாரம் கடற்றொழி அத்தியட்சகருக்கே
உண்டு” என்று தெரிவித்தார்.
இவ்வதிகாரத்தின் கீழ்
அத்தியட்சகர் பலமுறை உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும் விடத்தல்தீவு மீனவர்கள்
கோந்தைப்பிட்டித்துறை முகத்தை விட்டுச் செல்லவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில்
தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளான முஸ்லிம் மீனவர்கள் தமது உரிமைகளைக் கோரி மன்னார்
நீதிமன்ற வளாகத்துக்கப் பக்கத்திலிருந்த கொழும்பு - மன்னார் பாதையில் மறியல் போராட்டம் ஒன்றை நடாத்தினர்.
அப்போது நடைபெற்ற அசம்பாவிதங்களே விஸ்வரூபமெடுத்து பிரச்சினையை மேலும்
சிக்கலாக்கியுள்ளது.
மன்னார் நீதிமன்ற நடு நிலைபற்றி மன்னார் முஸ்லிம்கள் மத்தியில்
ஆழமான சந்தேகங்கள் ஏற்கனவே எழுத்திருந்ததன் காரணமாக உப்புக்குளத்திலும் அக்கம் பக்கத்துக்
கிராமங்களான அடம்பன், மரிச்சுக்
கட்டி முஸ்லிம் பள்ளி நிர;வாகிகள்
தங்களுக்கு நடுநிலை பேணும் நீதிபதி ஒருவரைத் தருமாறும், அத்தோடு நீதிவான் நீதிமன்றமும், மாவட்ட நீதிமன்றமும் வெவ்வேறாக இயங்க வழி செய்ய
வேண்டுமெனவும் கோரி 2012.06.12ல்
நீதிச் சேவைகைள் ஆணைக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தமையும் இங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் பிரச்சினை
கட்டங்கட்டமாக வளர;ந்து
விரிவடைந்து சென்ற நேரத்திலும் கூட மன்னார; மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான றிஷாத் பதியுத்தீன்
இப்பிரச்சினையில் தலையிடாது ஒதுங்கியிருந்து, இப்பிரச்சினையைத் தீர;க்கும் பொறுப்பை அரசாங்க அதிகாரிகளிடமே விட்டுவைத்தார;.
இதற்குக் காரணம் தன்னால் எடுக்கப்படும்
முடிவு முஸ்லிம்களுக்குச் சார;பானதாக
இருக்குமென்ற குற்றச் சாட்டு மாற்றுச் சமூகத்திடமிருந்து வரக்கூடாதென்ற
நல்லெண்ணத்துடனேயேயாகும். இச்செயல் எல்லாச் சமூகத்தையும் சமமாக மதிக்கும் அவருடைய
பெருந்தன்மையை எடுத்துக் காட்டுவதாகும்.
தனது மானத்தை
இழந்தாவது தனது சமூகத்தின் மானத்தைக் காப்பவன் தியாகி, தன் நலத்துக்காக தனது மானத்தையும், சமூக மானத்தையும் அடகுவைப்பவன் துரோகி.
ஆத்திரத்தோடு பார;த்தால் நிரபராதியும் குற்றவாளியாகி விடுவான்.
அனுதாபத்தோடு பார்த்தால் குற்றவாளியும் நிரபராதியாகிவிடுவான். ஆகவே நடுநிலை நின்று
பார்ப்பது நீதியின் கடமையாகும்.
No comments:
Post a Comment