Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, August 18, 2012

அமைச்சர் றிசாத் பதியுதீன் சிறந்த சேவையாளர்-பௌத்த அமைப்பு தெரிவிப்பு


இனங்களுக்கிடையில் ஒற்றுமையினையும்,புரிந்துணர்வினையும் ஏற்படுத்தி,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்  ஆற்றிவரும் பணிகள் பாராட்டுக்குரியது என்று மத அமைப்புக்களும்,பொது அமைப்புக்களும்,பொது மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளன.

வடக்கு-கிழக்கு மாகாண பௌத்த மத அமைப்பின் பிரதம சங்க நாயக்க தேரரான ஸ்ரீபோதிதக்சினாராமதிபதி சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரரின் தலைமையில் மேலும் ஏழு பௌத்த விகாரைகளின் பொறுப்பாளரகள் கையொப்பமிட்டு ஜனாதிபதி;க்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் மேலும் விமலசார தேரர குறிப்பிட்டுள்ளதாவது -
கடந்த பல வருடங்களாக இந்த நாட்டில் குறிப்பாக வடக்கில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் அதி உச்ச கட்டத்தில் காணப்பட்ட போதும்,பயங்கரவாதம் காரணமாக இடம் பெயர்க்கப்பட்ட மக்களை அவரகளது பிரதேசங்களில் மீள்குடியேற்றும் போது ஏற்பட்ட உயிர அச்சுறுத்தல்களின் போதும்,இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக பணியாற்றியவர அமைச்சர றிசாத் பதியுதீன் என்பதை எம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராகவும்,அமைச்சராகவும் பதவிகளை வகித்ததுவருவது முதல் இன்று வரை அவரது பணிகள்,ஒரு சமூகத்திற்கு மட்டுமன்றி.அதற்கப்பால் சிங்களவர் ,தமிழர,முஸ்லிம்கள் என பாராமல் அபரிமிதமான சேவைகளை பெற்றுக் கொடுத்து மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற ஒரு அரசியல்வாதி என்பதை இந்த நாட்டின் தலைவர; என்ற வகையில் நீங்கள் அறியாத விடயமல்ல.
2005 ஆம் ஆண்டு முதல் தங்களுக்கு முழுமையான ஆதரவை அமைச்சரறிசாத் பதியுதீன் வழங்கிவருவதால்,பல எதிரகட்சி அரசியல்வாதிகள்,அமைச்சரமீது  இன ரீதியான பிரசாரங்களை மேற்கொண்டுவருவதுடன்,துவேஷத்தையும் காட்டி,அவரது அரசியல் பாதையினை தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறுபட்ட தடங்கள்களை ஏற்படுத்திவருவதை தங்களது கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது.
அமைச்சரறிசாத் பதியுதீன் அவரகளின் மூலமாக எமது பிரதேசமும்,மக்களும் அளப்பரிய நன்மைகளை பெற்றுவருவதால்,எதிரகாலத்திலும் அத்தகைய பணிகள் தங்கு தடையின்றி எமது பிரதேசத்தை வந்தடைய தாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,வடக்கு-கிழக்கு பிரதம சங்கநாயக்கரகுறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை வவுனியா,மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர;ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.வடக்கில் இன்று தங்களது தலைமையின் கீழான அரசாங்கத்தில் கௌரவமாக வாழ்வதற்கு அமைச்சரறிசாத் பதியுதீன் ஆற்றிவரும் பணிகளை தமிழ் மக்கள் மறந்துவிடமாட்டார;கள் என்றும் மெனிக் பாரம் நலன் புரி முகாம் முதல்,தமிழ் மக்கள் அவர;களது பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரை முன்னெடுத்த செயற்பாடுகள் பாராட்டுக்குரியதாகவுள்ளது என்றும் தெரிவித்துள்ள அம்மக்கள்,இன ரீதியான அரசியலுக்கு அப்பால் செயலாற்றும் அரசியல் தலைவர; அமைச்சர றிசாத் பதியுதீன் என்பதை மகிழ்வுடன் தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை வவுனியா மாவட்ட அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையும் ஜனாதிபதி;க்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
பாதிகக்ப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதிலும்,இந்த நாட்டின் கௌரவத்துக்கு பாதிப்புக்கள் ஏற்படுத்தப்பட்ட போதெல்லாம் சரவதேச முஸ்லிம் நாடுகளுக்கு சென்று எமது நாட்டின் பெருமையினை எடுத்தியம்பிய ஒரு அரசியல் தலைவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து தாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும்,அமைச்சர றிசாத் பதீயுதீனின் பணிகளை முடக்குவதன் மூலம்,வன்னியில் மீண்டும் இனங்களுக்கிடையிலான அமைதியின்மையினை தோற்றுவிக்க சில சக்திகள் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பது குறித்தும் அவதானமாக இருக்குமாறும் ஜனாதிபதியினை வேண்டியுள்ளதுடன்,இந்த சக்திகளை தோற்கடிக்க வேண்டியது நாட்டின் தலைவர என்ற வகையில் தங்களுக்கு பொறுப்புக்கள் உள்ளது என்றும் அந்த கடிதத்தில் உலமா சபை குறிப்பிட்டுள்ளது.
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள சிங்கள,தமிழ்,முஸ்லிம்கள் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவரகள் தமது கையொப்பங்களை இட்டு ஜனாதிபதிக்கு இந்த  கடிதங்களை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment