நோன்பு பெருநாள் தொழுகை புத்தளத்திலும் சிறப்பாக இடம் பெற்றது
புத்தளம்
நலன்புரி அமைப்பு இம்முறையும் ஏற்பாடு செய்திருந்த நோன்பு பெருநாள் திறந்த
மைதான தொழுகையும்,கொத்துபா பிரசங்கமும் இன்று புத்தளம் சாஹிரா தேசிய
பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.
புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லுாரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.முனீர் அதனை நடத்தி வைத்தார்.
அதே
வேளை தொழுகையினையடுத்து ஒவ்வொருவரும் முஸாபஹா செய்து கொண்டு தமது
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.பெண்களும் இந்த தொழுகையில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment