கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்ள
தேவையான அனைத்து சாதகங்களும் எமது புலத்தில் இருப்பதால்,வீனாண விவாதங்களைவிடுத்து
ஒரணியில் நின்று செயற்படுவதே மக்களுக்கு செய்யும் நன்றிகடன் என கல்முனை மாநகர
சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம்.முபீத்
தெரிவித்துள்ளார்.
நற்பிட்டி முனை பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற இளைஞர் சந்திப்பின்
போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அங்கு அவர் உரையாற்றும் போது –
இன்று கிழக்கில் ஏற்பட்டுவரும் அபிவிருத்திகளை கொண்டு வந்தவர் இந்த நாட்டு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான்.ஆளும் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக அரசின்
உண்மையான பங்காளியாக இருக்கும் எமது கட்சியின தேசிய தலைவர் அமைச்சர் றிசாத்
பதியுதீன் தான் என்பதை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில்,எதையும்
மக்களுக்கு செய்து கொடுக்காமல் கிழக்கில் இனவாதம் பேசும் கட்சிகளின் பின்னால்
மக்கள் செல்வார்களென்றால்,மீண்டும் எமது மக்கள் பிச்சைப் பாத்திரம் ஏந்தும்
நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இன்று தடியெடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்கார்ர்கள் போன்று முஸ்லிம் அமைச்சர்களை
அவமதிக்கும் அளவில் சில எதிர்கட்சி தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள்
அறிக்கைவிடுக்கின்றனர்.தமது பிரதேச சபைக்குள் ஒரு மின் குமிழைக் கூட போட்டு மக்களுக்கு ஒளியினை பெற்றுக் கொடுக்க
முடியாதவர்கள்,இவ்வாறு அமைச்சரவை அமைச்சர்களுக்கு சவால் விடுவது கேலிக் கூத்தாகும்.அவர்களுக்கு
ஒன்று சொல்ல விரும்புகின்றேன்.முதலில் பிரதேச சபை எல்லையில் உள்ள மக்களுக்கு
அவர்கனளது உரிமையை பெற்றுக் கொடுங்கள்,அதன் பிறகு மாவட்டத்தை பற்றி பேசுவோம்.
கிழக்கு மாகாண சபையை அரசாங்கம் கைப்பற்றும் என்பதில் எவ்வித
சந்தேகமுமில்லை.இனவாத அரசியல் ஒரு போதும் வெற்றியளித்தாக வரலாறுகள் இல்லை.தலைமைப் பதவி
இருக்கின்றது என்பதற்காக எவரையும் அவமானப்படுத்தக் கூடாது.இன்று எமது கட்சியின்
தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்,கிழக்கு மக்களுக்கு பாரிய
அபிவிருத்திகளை செய்துள்ளார்.மேலும் பல்வேறு திட்டங்களை தயார்படுத்தியுள்ளார்.அவர்
வன்னி மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர்,ஆனால் எமக்கு அவர் பணியாற்றுகின்றார்.
இது தான் எமது தலைமையின் முன்மாதிரி என்பதை எவரும் மறந்துவிட முடியாது,
எந்த வேளையிலும் எவருடனும் மக்களுக்காக பேசும் நேர்மை மிக்கவர்,அவரது
அமைச்சு மூலம் எமது மாவட்டம் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளது.இன்று சிலர் தன்மானம்
பற்றி பேசுகின்றனார்கள்,கிழக்கில் மக்களின் வாழ்வு சீரழிவதற்கு வித்திட்டவர்கள்
அவ்வாறு பேசுபவர்களே என்பதை மக்கள் அறியாமல் இல்லை.
தம்புள்ள பிரச்சினை ஏற்பட்ட போது முதலில் சென்று குரல் கொடுத்தவர் எமது
தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பது வரலாற்று பதிவாகும்.இன்று சில தமிழ் கட்சியினர்
தன்மானமுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தால் இந்த அரசாங்கத்திலிருந்து வெளியேற
வேண்டும் என்று ஒரு பிரதேச சபை உறுப்பினர் பேசிவருகின்றார்.அரசாங்கத்துக்கு எதிராக
வாக்களித்து விட்டு அரசாங்கத்தில் உள்ள
அமைச்சர்களை வெளியேறுமாறு கோரும் இவரது பேச்சு சிறுபிள்ளைதனமானதாகும்.
இந்த தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை பெற்று ஆட்சி
அமைக்கும் என்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment