Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, February 2, 2011

வவுனியா நெடுங்கேணி அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மாணம்


நெடுங்கேனிக்கும்-வவுனியாவுக்குமிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக நெடுங்கேனி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாருக் தெரவித்தார்.


வவுனியா வடக்கு நெடுங்கேனி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன்,செல்வம் அடைக்கல நாதன் நெடுங்கேனி பிரதேச செயலாளர் பரந்தாமன்,மற்றும் பொலிஸ்,இரானுவ மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடை முறைப்படுத்துவது குறித்து அறிவிக்கும் போதே அவா் மேற்கண்டவாறு கூறினார்.

சமாதனத்தின் பின் முதலாவதாக நெடுங்கேனி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று இடம் பெற்றது

மேலும் பாராளுமன்ற உறுப்பினா் ஹூனைஸ் பாருக் தெரிவிக்கையில்

கடந்த சில தினங்களாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மழை காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.விவசாயம் முழுமையாக அழிந்து போயுள்ளதை காணமுடிகின்றது.இந்த அழிவுகளுக்கான நஷ்டயீடு பெற்றுக் கொடுப்பதற்காக விவசாய அமைச்சிடம் தொடா்புகளை மேற்கொள்ளவுள்ளோம்.அத்துடன் இன்னும் சில வாரங்களில் உழுந்து பயிர் செய்கையினை மேற்கொள்ள விவசாய திணைக்களததுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளை நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள பாதைகளை புனரமைப்பு செய்து மக்களின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்த மழை காலம் முடிந்ததும்,அதனது அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

பொது பணிகளுககான கட்டிடங்கள் இங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது.அதற்கான நிதியினை அரசாங்கம்,மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பெறுவதற்கான திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.

இன்று எமது வன்னி மாவட்ட மக்களுக்கு தேவையானது அபிவிருத்திகளே,அதனை அடைந்து கொள்ள நாம் இணக்கப்பாட்டுன் கூடிய பங்களிப்பினையே வழங்க வேண்டும்.அரச அதிகாரிகள் அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கு நேர்மையான சேவைகளை வழங்க வேண்டியவா்கள்.அவா்கள் அராங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக செயற்படும் போது பாதிக்கப்படுவா்கள் அப்பாவி மக்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment