எதிர்வரும் மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக புத்தளம் தேர்தல் பணியக அதிகாரியொருவா் தெரிவித்தார்.
இம்முறை புத்தளம் மாவட்டத்தில் 10 பிரதேச சபைகளுக்கும்,2 நகர சபைகளுக்குமாக போட்டியிடவென கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் அடங்கலாக 74 குழுக்கள் போட்டியிடவுள்ளதாக புத்தளம் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பொ்ணான்டோ தெரவித்தார்.
புத்தளம் நகர சபைக்கு- 09 உறுப்பினர்கள்,சிலாபம் நகர சபைக்கு 11 உறுப்பினர்கள்,கல்பிட்டி பிரதேச சபைக்கு 14 உறுப்பினர்கள்,புத்தளம் பிரதேச சபைக்கு 09 உறுப்பினா்கள்,வண்ணாத்தவில்லு பிரதேச சபைக்கு 10 உறுப்பினா்கள்,கருவலகஸ்வெவ பிரதேச சபைக்கு 10 உறுப்பினா்கள்,நவகத்தேகம பிரதேச சபைக்கு 09 உறுப்பினர்கள்,ஆனமடுவ பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்கள்,ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு 12 உறுப்பினா்கள்,சிலாபம் பிரதேச சபைக்கு 17 உறுப்பினா்கள்,நாத்தாண்டிய பிரதேச சபைக்கு 22 உறுப்பினா்கள்,வென்னப்புவ பிரதேச சபைக்கு 22 உறுப்பினா்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் கூறினார்.
No comments:
Post a Comment