கிழக்கு மாகாண அரச ஊழியா்களுக்கு மாதாந்த கடனடிப்படையில் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக நுகர்வு பொருட்களை வழங்கும் திட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
கிழக்கு மாகாண கூட்டுறவு துறையில் புதிய திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர் மட்டக் கூட்டம் கிழக்கு மாகாண சுகாதார,கூட்டுறவு துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம் பெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள பணிமனையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் கூட்டுறவு ஆணையாளர் எம்.சீ.எம்.ஷரீப்,அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்,பிரத்தியேக செயலாளர் எச்.எம்.தௌபீக்,உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் 35 ஆயிரம்,அரச ஊழியர்கள் உள்ளனர்.அவா்களின் மாதாந்த சம்பளத்தின் ஊடாக அவா்கள் பெறும் பொருட்களுக்கான கட்டணங்கள் கூட்டுறவு கடைகள்,மற்றும் கோப் சிற்றி மூலம் அறவிடப்படவுள்ளது.
கோப் சிற்றிகள் மற்றும் பலநோக்கு கூட்டுறவு கடைகளின் தொலைபேசி இலக்கங்களையும் காட்சிபடுத்தவுள்ளன.அந்த தொலைபேசி இலக்கங்கள் மூலம் தமக்கு தேவையான பொருட்களின் விபரங்கள பெற்றுக் கொள்ளவதுன்,ஒடர் செய்யப்படும் பொருட்கள் அரச ஊழியர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கையெடுக்கப்படும்.இது தொடா்பாக மாகாணத்திலுள்ள திணைக்கள தலைவா்கள்,மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத் துறையினை வினைத் திறன்மிக்கதாக மாற்றி அமைத்தல்,அரச ஊழியர்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுத்தல் என்பனவற்றை நோக்கமாக கொண்டு இத்திட்டம் நடைமுறைக்குவரவுள்ளதாக மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான பணிப்புரையினை வழங்கிய அமைச்சர் சுபைா்,மாதமொன்றுக்கு 300 மில்லயின் ரூபா என்ற இலக்கை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment