Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, January 28, 2011

புத்தளத்திற்கான புதிய தலைமைத்துவத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு தொழிலதிபா் அலி சப்ரி அழைப்புவிடுத்துள்ளார்.


புத்தளம் மக்கள் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்க தயாராகிவருவதாக  புத்தளம் அனைத்து மதங்களின் சமாதான பேரவையின்  தலைவரும்,பிரபல சமூக சேவையாளருமான  ஏ.ஆர்.அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புத்தளம் வான் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று மாலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவா் மேற் கண்டவாறு கூறினார்.


மேலும் அவா் அங்கு பேசுகையில் கூறியதாவது –
புத்தளம் தொகுதி மக்கள் இன்று தமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இழந்துள்ளனர்.இதற்கான காரணம் பிரதேசத்தில் வாழ்பவா்களுக்கிடையில் ஒற்றுமையின்மையும்,சுயநலப் போக்குகள் ஆட்கொண்டுள்ளமையாகும்.இதற்கு காரணமானவா்கள் அரசியல்வாதிகள் என்றால் அதனை மறுப்பதற்கில்லை.
புத்தளத்து மக்கள் தமது அபிவிருத்தி மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் எதிர் கால சமூகத்தின் அபிவிருத்தி என்பனவற்றை பற்றி சிந்திக்கும் சரியான தருணம் வந்திருக்கின்றது.வெறும் வெற்று வாக்குறுதிகளுக்கு காது கொடுத்துவிட்டு மீண்டும் எமது நகரை பின்னடைவின் பக்கம் செல்லவிடுதா என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டியுள்ளது.
எதிர்வரும் தேர்தலை எமது மக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பயன்படுத்த வேண்டும்,புத்தளத்தின் ஆட்சி மாற்றம் மாவட்டத்தின் அடுத்த தேர்தலுக்கு அடித்தளமாக அமையும் என்பதில் உறுதியுடன் செயற்பட சகலரும் கருத்துக்களையும்,கட்சியின் சித்தாந்தங்களையும் களைந்து ஒரணியில் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளையும் அமைப்பின் தலைவர் அலி சப்ரி முன்வைத்தார்.

No comments:

Post a Comment