புத்தளம் அநுராதபுரம் வீதியில் 3 வது மைல் அருகில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் புத்தளம் மரைக்கார் வீதியைச் சேர்ந்த ஹதாத் முஹம்மத் அஸ்கர்,3 பிள்ளைகளின் தந்தை பலியானார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.புத்தளத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தாம் பணியாற்றும் இடத்துக்கு சென்று கொண்டிருந்த போது,பின்னால் வந்து கொண்டிருந்த லொறி மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
லொறியின் சாரதி பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment