புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 130 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவார்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
தேசமான்ய டபிள்யூ.எஹியான் பவுண்டேஷன் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.தில்லையடி றிசாத் பதியுதீன் மஹா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,முன்னால் ரஷ்யா மற்றும் சுவீடன் நாடுகளுக்கான உயர் ஸ்தானிகர் சிக்கன்தர்,தொழிலதிபர்களான எஸ்.அவலாவுதீன்,எஸ்.அரவிந்தன்,கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்புத்தளம் கல்வி வலயத்திலிருந்து 32 தமிழ் மொழிப்பாடசாலைகளின் 280 மாணவர்கள் நினைவுச் சின்னம்,சான்றிதழ்,பணப்பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தேசமான்ய டபிள்யூ எஹியான் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.





No comments:
Post a Comment