Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, November 8, 2010

முல்லை தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயம் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லிம் வித்தியாலயத்தை மீள திறந்து கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது குறித்து
பெற்றோர்களினதும்,பிரதேச அரசியல்வாதிகளினதும் கவனத்தை ஈா்க்கும் நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்ட ஜமிய்யத்துல் உலமா சபை ஆரம்பித்துள்ளது.


இது குறித்த கலந்துரையாடலொன்று புத்தளம் பாலாவியில் உலமா சபை தலைவா் மௌலவி முஜீப் தலைமையில் இடம் பெற்றது.அதன் போது டிசம்பா் மாதத்துக்குள் பாடசாலைக்கு உள்வாங்கப்படும் மாணவா்களின் விபரங்களை சேகரித்தல்,மற்றும் பாடசாலைக்கான பௌதீக வளங்களை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் என்பன இங்கு பேசப்பட்ட விடயங்களாகும்.


இதே வேளை 20 வருடங்களின் பின்னா் முதற் தடவையாக தண்ணீருற்று பள்ளிவாசலில் ஜூம்ஆத் தொழுகையும்,பிரசங்கமும் இடம் பெற்றது.இதனை மௌலவி முஜீப் நடத்தி வைத்தார்.

தற்போது முல்லைத்தீவு தண்ணீரூற்று கிராமத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் மீளக்குடியமர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment