Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, August 12, 2020

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கலாநிதி ஹரினி பரிந்துரை

 

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தியின் தலைமைச் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.


இவர், பல்கலைக்கழக கலாநிதிகளின் சங்கத்தின் செயலாளராக செயற்பட்டுள்ளார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் குழுவில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

இது தொடர்பான தீர்மானம் இன்று (12) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment