.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு இடம் பெயர்வுக்குள்ளான மக்கள்
எதிர் கொண்ட பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ளும் வகையில் தற்போது வாழும்
பிரதேசங்களில் வாக்களிக்கவென தேர்தல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வழி
முறைககளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு முன்னாள் அமைச்சரும்
.அகில இலங்கை மக்கள் காங்கிரஜின் தலைவருமான றிசாத் பதியுதீன் வாக்காளர்களிடம்
வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இந்த பணியினை மக்களுக்கு இலகுபடுத்தும் வகையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள
நலன்புரி கிராமங்களில் இப்பணிகளை நெறிப்படுத்தும் வடக்கு இடம் பெயர்ந்தோர் மக்கள்
பேரவையின் சேவையினை மக்கள் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் இதனை
பெற்றுக்கொள்ளுமாறும் இன்றைநய தினம் இறுதி தினமாக தேர்தல் ஆணையகத்தின் தலைவரினால்
அறிவிக்கப்பட்டுள்ளதால் முடியுமான வரை இன்றைய நாளில் இப்பணிகளை தமது முக்கிய
கடமையாக எண்ணி அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் றிசாத் பதியுதீன் வேண்டியுள்ளார்
No comments:
Post a Comment