வெசாக் பண்டிகையையொட்டி, சிகிரியா தொல்பொருள் தளம், அருங்காட்சியகத்தை மூன்று நாட்களுக்கு இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிகிரியா வேலைத்திட்ட முகாமையாளர் மேஜர் அநுர நிசாந்த தெரிவித்தார்.
சிகிரியாவில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கல்வி கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றது.
No comments:
Post a Comment