Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, May 18, 2019

பங்களாதேஷ் நாட்டுப் பெண் ஒருவர் கைது


Image result for bangladeshபொலன்னறுவை, நிஷ்ஷங்கமல்லபுர பிரதேசத்தில் விசா இன்றி தங்கியிருந்த வௌிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலன்னறுவை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

35 வயதுடைய பங்களாதேஷ் நாட்டுப் பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பெண் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment