Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, May 16, 2019

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை


நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லைஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இதுவரை தீர்மானிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார். 





 

இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்ற கூட்டு எதிர்க்கட்சியிலேயே இரண்டு கருத்துக்கள் நிலவுவதாக அவர் கூறினார். 

நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்ற தரப்பிரிலேயே இரண்டு கருத்துக்கள் இருக்கும் போது பொறுப்புமிக்க கட்சி என்ற வகையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கும் என்று துமிந்த திசாநாயக்க கூறியுள்ளார்.