Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, May 16, 2019

அரபு மத்ரசாக்கள் தொடர்பில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்


அரபு மத்ரசாக்கள் தொடர்பில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்

அரபு மத்ரசாக்கள் தொடர்பில் ஒரு ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன், மத்ரசாக்களின் பாடவிதானங்கள், கற்பிப்பவர்கள் மற்றும் மத்ரசாக்களுக்கு பணம் கிடைக்கின் வழிமுறைகள் தொடர்பில் ஒரு ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 


( 2019-05-16 ) பகல் கொழும்பு மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

இந்த ஊடக சந்திப்பில் முஸ்லிம் பிரதிநிதிகளான அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாகார், பேரியல் அஷ்ரப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

அரசாங்கத்தால் பெண்கள் முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் முஸ்லிம் மக்கள் அதனை செயற்படுத்தியுள்ளதாகவும், அதேபோன்று முஸ்லிம் சமூகத்தால் முடியுமான அனைத்தையும் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

அதேபோன்று எதிர்காலத்தில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். 

துரதிஷ்டவசமாக ஒரு சிலர் அடிப்படைவாதிகளாக மாறியதால் தாம் சமூகம் மற்றும் இனம் என்ற அடிப்படையில் இணைந்து அதனை தோற்கடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.