Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, June 10, 2017

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள், காப்புறுதி கொடுப்பனவு

அண்மைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் காப்புறுதி இழப்பீடு மற்றும் அரசாங்கத்தின் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். மோசமான வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ நிலை யம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு தொடர்பாக ஜே.வி.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: அனர்த்த முகாமைத்துவ நிலையம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட சகலவற்றுக்கும் இந்த முன்னெச்சரிக்கையை விடுத்திருந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான உடனடி நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் அது தொடர்பான சட்டமும் 2005ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. நீரை அடிப்படையாகக் கொண்டே அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக வௌ்ளப்பெருக்கு மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு நாடு அடிக்கடி முகங்கொடுக்கிறது. இலக்கங்களைக் கொண்ட அளவுமுறையின் அடிப்படையில் வளிமண்டலவியல் திணைக்களம் காலநிலையை அளவிடுகிறது. இதற்காக சர்வதேச தகவல்களில் மாத்திரம் நாம் நம்பியிருக்க முடியாது. மே மாதம் (24) முதல் (29) வரையான காலப்பகுதிக்கான காலநிலை பற்றிய எச்சரிக்கையை விடுத்திருந்தோம்.
அனர்த்த நிலைமையில் முப்படையினர் முக்கிய பங்காற்றியிருந்தனர். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் முப்படையினருக்கு கடந்த வருடம் 100 மில்லியன் ரூபாவை செலவுசெய்திருந்தது. இவர்கள் மாத்திரமன்றி பொதுநிர்வாக அமைச்சின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.
காலநிலை குறித்த எச்சரிக்கை கிடைத்தவுடன் அதிகாரிகள் ஒலி பெருக்கிகள் மூலம் அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்கள். இதனாலேயே உயிரழப்புக்களை பெருமளவு குறைக்க முடிந்தது.
மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்கள் ஊடாக அரசாங்கத்தின் பொறிமுறை செயற்படுத்தப்பட்டது. இவர்கள் அரசாங்கத்தின் பொறிமுறையின் கீழ் இல்லாதவர்கள் எனக் கூறினால் அது தவறாகும். அனர்த்தத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தமையால் முப்படையினரின் உதவிகள் பெறப்பட்டன. 8500 இராணுவத்தினர் இந்தப் பணிகளில் ஈடுபட்டனர். இவர்கள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உணவுப் பார்சல்களை மக்களுக்கு வழங்கியிருந்தார்கள்.
( தகவல் -தினகரன் இலங்கை)