Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, June 10, 2017

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள்

சிவில் விமான சேவைகள் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண மற்றும் அவரது பிரத்தியேகச் செயலாளர் ஆகியோர் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று வழக்கு தாக்கல் செய்துள்ளது.


முன்னாள் அமைச்சர், சிவில் விமானசேவை அதிகாரசபையின் சட்டதிட்டங்களை மீறி அவரது பிரத்தியேகச் செயலாளரான பி.தயாவன்சவை அபிவிருத்தித் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்ததன் மூலம் அரசுக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே இவ் விருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண மற்றும் அவரது பிரத்தியேகச் செயலாளர் பி.தயாவன்ச ஆகியோர் மீது 05 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்னவுக்கும் அவரது பிரத்தியேகச் செயலாளர் பி.தயாவன்சவுக்கும் எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் 70ஆ வது சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியிலிருந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலேயே பிரத்தியேகச் செயலாளரான பி.தயாவன்சவை அபிவிருத்தி திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்துள்ளார்.
இதன்மூலம் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளாரென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Email Facebook Twitter Google+ Pinterest PrintFriendly Share