மன்னார்
நகர சபைக்குட்பட்ட பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகையொன்றில் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு வாக்களித்த ஆரவாளர்கள்,ஏற்கனவே
மைத்திரிபால சிறிசேன அவர்கள் மன்னாருக்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த போது காட்சிப்படுத்தப்பட்ட
பதாகையெினை மீண்டும் அதனை வெற்றியின் பின்னர் காட்சிப்படுத்துவதற்கு இதனை ஒட்டியுள்ளனர்.
இது
தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆதரவாளர்கள் இந்த பெனரின் இற்கு காட்சிப்படுத்தியுள்ளனரே
தவிர,இது நிரந்தரமாக அமைக்கப்பட்ட ஒன்றல்ல என நகர சபை உறுப்பினர் நகுசீன் குறிப்பிட்டார்.
எமது
மாவட்டத்தில் எத்தனையோ பிரச்சினைகள்,தேவைகள் இருக்கின்ற போது மாவட்டத்தில் சமாதானத்தை
விரும்பாத மறைந்திருக்கும் பிற்போக்கு சக்திகள் இந்த விடயத்தை பூதாகரமாக மாற்றுவதற்கு
நகர சபை தலைவருககு பிழையானதொரு கருத்தை தெரிவித்துள்ளதாக அறிகின்றேன்.
இது
தொடர்பில் சகர சபை தலைவருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்துள்ள மன்னார் நகர சபை உறுப்பினர்
நிலாமுதீன் நகுசீன்,அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த மாவட்டத்துக்கும்,மக்களுக்கும்
இன மத பேதின்றி பணியாற்றிய ஒருவர்,அதே போல் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக
இருந்து பெறும் உதவிகளை செய்துள்ளார்.
ஜனாதிபதி
தேர்தல் நடைபெற்று முடிந்து இரு தினங்கள் செல்வதற்கு முன்னர் மன்னாரில் உள்ள சிலர்,தமது
சில அரசியல் தேவைகளுக்காக சிலரின் சிபாரிகளின் பேரில் இந்த பெயர் பலகை தொடர்பில் பிழையான
கருத்துக்களை நகர சபை தலைவருக்கு வழங்கியதுடன்,அமைச்சர் றிசாத் பதியுதினை இந்த புதிய
அரசிலும் பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்பட ஆரம்பித்துள்ளமை கவலைத் தரும் விடயமாகும்.
இவ்வாறு
செய்வதன் மூலம் அவர்கள் எதிர்பார்க்கும் சின்னத்தனமான செயற்பாடுகளால் ஒரு போதும் எமது
மாவட்டத்தின் நிர்வாகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது.
அமைஅச்சரின்
ஆதரவாளர்கள் இதனை செய்த போதும் அதற்கு முழுமையாக
அமைச்சர் றிசாத் பதியுதீன் மீதுபொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது தொடர்பில்
நாம் எமது கவலையினை தெரிவித்துக் கொள்கின்றோம்.வடக்கு மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுமக்களுக்கும்
பாரிய பணிகளை ஆற்றிவரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் இவ்வாறான தேவையற்ற ரீதியில்
உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்
மன்னார்
மாவட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் சிறந்த பணியினை ஆற்றிவரும் இந்த இணையத்தளத்தினை
தமிழ்,முஸ்லிம் மக்கள் விரும்பி பார்வையிட்டுவருகின்றனர்.இந்த நிலையில் செய்தியினை
பிரசுரிக்க முன்னர் எனது கருத்துக்களையும் கோறியிருந்தால் தெளிவான பதிலை என்னால் வழங்கியிருக்க
முடியும் என்பதாக தெரிவித்துள்ள மன்னார் நகர
சபை உறுப்பினர் நகுசீன்,இது தொடர்பில் அடுத்த சபையின் அமர்வில் விளக்கமொன்றை அளிக்கவுள்ளதாகவும்
கூறினார்.