Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, January 7, 2015

மக்களது வாக்குகளை கொள்ளையிட-இலஞ்சமாக உணவு பொதிகள் ஏமாற வேண்டாம் என்கின்றார் றிசாத் பதியுதீன்

-    இர்ஷாத் றஹ்மத்துல்லா -
தேர்தலில் மக்களை பலவந்தமாக வாக்குகளை பெறும் வகையில்  வாக்காளர்களுக்கு பல்வேறுபட்ட பொருட்களை இலஞ்சமாக வழங்கவதற்கு சிலர் செயற்படுவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தரவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன்,இவ்வாறு பொருட்களை கொடுக்க வரும் நபர்கள் தொடர்பில் பொலீஸார் மற்றும் பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு உடன் கொண்டுவருமாறும் கேட்டுக் கொண்டார்.


மன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் றிசாத் பதியுதீன் தகவல் தருகையில் கூறியதாவது –

தற்போது மன்னார் மாவட்டத்தில் இந்த செயற்பாடுகள் இடம் பெறுவதாக அறியக் கிடைக்கின்றது.அதே போன்று முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படும் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன்,மக்கள் மிக்க அவதானத்துடன் இருக்குமாறும் இவ்வாறான ஏமாற்று பேர் வழிகளை நம்பி தமது ஜனநாயக உரிமையினை இழந்து விட வேண்டாம் எனவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.