தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் மற்றும் வாக்காளர்கள் குறித்து சில விடயங்களை இங்கு
பேசுவது பொருத்தமாகும்.19 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர்
மஹிந்த தேசப்பிரிய கூறுகின்றார்.
வேட்பு
மனு தாக்கலின் பின்னர் கருத்துரைக்கும் போது -
ஜனாதிபதி
தேர்தல் ஜனவரி 8 அஆம் திகதி நடை பெறும்.ஜனாதிபதி தெர்தல் நடைபெறும் காலம் வரை இந்த
அலுவலகம் செயற்படும்.தேர்தல் நடை பெறும் காலம் வரை அங்கீகரிக்கப்பட்ட அலுவலகங்கள் மட்டும்
காரியாலயங்களாக செயற்படும்.
வேட்பாளர்
தவிர வேறு எவரும் தமது வாகனங்களில் கட்சி வேட்பாளர் அல்லது அடையாளம்,சின்னம் பொறிக்கப்படுவத
தடை செய்யப்பட்டுள்ளது.
சட்டம்
ஒழுங்கை நிலை நாட்டும் வகையில் பொலீஸாரின் உதவிகள் பெறப்படும் அதே வேளை சகல கட்சிகளும்
அதற்கான முழுமையான ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.
ஜனாதிபதி
தெரிவு செய்யும் தேர்தலில் வாக்களிப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சட்டங்களை உரிய
முறையில் ஏற்று செயற்படுவது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.இது குறித்து ஊடகங்கள்,மற்றும்
சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை
தெவிர்ப்பது சகல அரசியல் கட்சிகளின் கடமையாகும்.பிரதேச மட்டத்தில் ஏற்பட்டுவரும் அச்சுறுத்தல்
தொடர்பில் கட்சி மற்றும் அரசியல் தலைமைகள் இதனை தவிர்ப்பதற்கு தேவையான தெளிவுகளை தமது
ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
அரசியல்
ரீதியான கருத்து முரண்பாடுகளால் கடத்தல்,தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் தவிர்க்கப்பட
வேண்டும்.
ஊடகங்கள்
பிழையான.பொய்யான தகவல்களை பிரசுரிப்பது.வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.(இரு முறை
கூறினார்).அரச,தனியார் ஊடகங்கள் தேர்தல் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுவது தவிர்க்கப்பட
வேண்டும்.ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்த இன்று முதல் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.