யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்ற அமைச்சர், காயமடைந்த ஈ.பி.டி.பி. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் நலம் விசாரித்தார்.
இதன்போது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, யாழ். மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் உடனிருந்தனர்.
Thanks-
(அத தெரண)