Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, December 16, 2014

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முசலி பிரதேச சபை உறுப்பினர் எவரும் நேற்றைய கூட்டத்தில் இணையவில்லை-பைரூஸ்

                       - முஹம்மத் தம்பி -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முசலி பிரதேச சபையின் எந்தவொரு உறுப்பினரும்,கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ஹூனைஸ் பாருக் எம்.பியின் நேற்றைய கூட்டத்தில் இணைந்து கொள்ளவில்லையென தெரிவித்துள்ள முசலி பிரதேச சபையின் பிரதி தலைவர் எம்.பைரூஸ் பிழையான செய்தியினை சிலர் எழுதுவதாகவும் கூறினார்.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபை மூலம் முசலி மக்களுக்கு பெரும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன.எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் சாதுாரியமான மற்றும் மக்களை பாதுகாக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்துள்ள நிலையில்,அமைச்சரின் நற்பெயருக்கும்,அவரது  மக்கள் பணிக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் வங்குரோத்து அரசியலை முன்னெடுப்பதாகவும் முசலி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பைரூஸ் தெரிவித்தார்.