வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்கள் தொடர்பில் அவர்களது நலனில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அக்கறை
கொள்வதில்லை என்பதுடன், அம்மக்களது அகதி வாழ்வினை அரசியல் மூலதனமாக கொண்டு
செயற்படுவதாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அமைப்பின அங்கத்தவர் அப்துர்
ரஹ்மான் என்பவரால்
மன்னாரில் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் கவனம் செலுத்துவது இக்காலத்தின் தேவையாகும்.
ஜனநாயக நாடொன்றில் தமது கருத்தை
சுதந்திரமாக தெரிவிப்பதற்கு முழமையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.போன்று
தான் தெரிவிக்கும் கருத்து எவ்வளவு தூரம் உண்மைத்தன்மை கொணண்டவை அதுவும்
ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் அதனது தற்பரியம் என்ன என்பதை புரிந்து கொண்டு
பேசுவது தான் சிறந்ததாகும்.
வடக்கில் 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள்
பாசிச புலிகளினால் பலவந்தமாக பச்சிளம் பாலகர் தொடக்கம் முதியோர் வரை
வெளியேற்றப்பட்ட வரலாறு இலங்கையினை பொருத்த வரையில் ஒரு கறைபடிந்த
சரித்திரத்துடன் இதன் மூலம் எமது மக்கள் கற்றுக் கொள்ளக் கூடிய
படிப்பினைகள் ஏராளம் உள்ளது.இந்த வெளியேற்றத்தினால் ஏற்பட்ட வலிகளும்,
வேதனைகளும், இழக்கப்பட்ட உயிர்களும், சொத்துக்களின் மதிப்பீடுகளும் இன்னும்
முற்றுப் பெறாத ஒன்றாக இருக்கின்றது என்பதில் முழுமையான உடன்பாட்டை எட்ட
முடியும்.ஆனால் இந்த அகதி முகாம் வாழ்வு,அதனது பின்னரான சிறியதொரு
முன்னேற்றம், மீள்குடியேற்றம் தொடர்பில் அப்துர ரஹ்மான் தெரிவித்துள்ள
கருத்து இந்த நாட்டில் இருந்த மர்ஹூம் அஸ்ரப் முதல் பாராளுமன்ற உறுப்பினர்
ஹூனைஸ் பாருக் அதனையும் தாண்டி பிரதேச சபையின் தவிசாளரகள் எதனையும்
செய்யாது கண்மூடி பொம்மைகளாக இருந்தார்கள், நாங்கள் தான் எல்லாவற்றையும்
செய்கின்றோம் என்று மார்தட்டிக் கொள்ளும் ஒரு வகையான பெருமைத் தன்மையினை
அவரது உரையில் தொனிப்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்டி ஆக வேண்டும்.
1990 ல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட
போது ஆட்சியில் இருந்த அரசு தொடர்பில் விமர்சனங்கள் வரலாம், அப்போதைய
ஆட்சியின் பங்காளியாக இருந்த கட்சிகள் யார் என்பதை மக்கள் நன்கு
அறிவார்கள். அதன் பிற்பாடு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் சந்திரிக்கா அரசில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் அஸ்ரப் தலைமையில் ஆற்றிய பணிகள்
என்ன அப்போது அக்கட்சியின் இரு வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னால்
அமைச்சர் எஸ்.எஸ்.எம்.அபூபக்கர், டாக்டர் இல்யாஸ் ஆகியோர் இடம் பெயர்ந்த
மற்றும் உள்ளுர் மக்களுக்கு ஆற்றிய பணிகள் தொடர்பில் சகோதரர் அப்துர்
ரஹ்மான் தகவல்களை பெற்றுக் கொள்ள மறந்திருப்பது ஏன் என புரியவில்லை.
தேவையான தகவல்கள் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின்
காப்பகத்தில் இருக்கின்றது.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள்
வெளியேற்றப்பட்டு இன்றுடன் 24 வருடங்கள் கழிந்த நிலையில் சில அமைப்புக்கள்
புதிதாக வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாங்களே தீர்த்து வைக்கப்
போகின்றோம் என்று கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை போன்று ஊடகங்களுக்கு
கருத்துரைத்துவருகின்றனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய சகோதரர் அப்துர்
ரஹ்மான் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு வந்து புத்தளம் கற்பிட்டியில்
அமைக்கப்பட்டடிருந்த அகதி முகாமில் சில தினங்கள் தங்கியிருந்து இம்மக்களின்
துன்பியல் வாழ்வை அனுபவித்தாக கூறியிருந்தார்.இது வரவேற்கக் கூடியதொன்று
இருந்த போதும் 24 வருடங்களின் பின்னர் இம்மக்கள் குறித்து அதிக கரிசணை
தோன்றியுள்ளதன் பின்னணி என்ன என்பதை பார்க்கவும் வேண்டியுள்ளது.
வடக்கில் பயங்கரவாத் ஒழிக்கப்பட்டதன்
பிற்பாடு இடம் பெற்றமீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் கள
ஆய்வொன்றினை அப்துர் ரஹ்மான் செய்ய தவறியதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
அரசியல் கிளையாக பரிணமித்துள்ள கிழக்கினை மையமாக கொண்டு செயற்படும்
நல்லாட்சிக்காண அமைப்பு என்ற இயக்கத்தின் தரவுகளின் அடிப்படையில் தமிழ்
தேசிய கூட்டமைப்பின் முஸ்லிம் தமிழ் விரோத சக்தியாக காண்பிக்க
எடுக்கப்பட்டுள்ள எடுகோலாக இன்றைய இந்த மன்னார் விழா அமைந்துள்ளதை இங்கு
தெளிவாக பாரக்க முடிகின்றது.
வடக்கில் முஸ்லிம்கள் வாழக் கூடாது
அவர்களது அடிச்சுவடுகள், மஸ்ஜிதுகள் அழிக்கப்பட வேண்டும் என்று செயற்பட்ட
புலிகளின் மற்றுமொரு முகவரான தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வளவு காலமும்,
வடக்கில் இருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு எதிராக மேற்கொண்ட
அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டதுடன், சதிகளும் அல்லாஹ்வின்
உதவியுடன் முறியடிக்கப்பட்ட நிலையில் வடக்கு முஸ்லிம்களுக்கு இழப்புக்களை
பெற்றுக் கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்து போட்ட பிச்சை தான்
வடமாகாண சபை உறுப்பினர் கௌரவத்துக்குரிய நண்பர் அஸ்மின் அய்யூப் என்பதை
மக்கள் புரியாமலில்லை. இவரை வைத்துக் கொண்டு செயற்படும் கிழக்கின் அமைப்பான
இந்த அமைப்பு மன்னாரில் வந்து மீள்குடியேற்றம் திட்டமிடுவோம், முஸ்லிம்
அரசியல் தலைமைகளை காடடிக் கெடுப்போம் நாங்கள் தான் மக்கள் சேவகர்கள் என்று
முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
இன்று வடக்கில் குறிப்பாக மன்னார்,
வவுனியா, முல்லை மாவட்டங்களில் முஸ்லிம்கள் கணிசமாக
மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் சில பகுதிகளில் மீள்குடியேற்றம்
செய்யப்படவுள்ளனர். அன்று அமைச்சராக இருந்த மர்ஹூம் அஸ்ரப் தற்போதைய
அமைச்சராக இருக்கின்ற றிசாத், மற்றும் இதர அரசியல் தலைமைகள் இந்த
மீள்குடியேற்றத்திற்காக ஆற்றியுள்ள பணிகளையும், சேவைகளையும் மறந்து தமிழ்
தேசிய கூட்டமைப்பின் நிகழ்சி நிரலில் செயற்படும் அமைப்பினர் வடக்கு
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றி முரண்பாடுகளை தோற்றுவிக்கும்
அறிக்கைகளை விடுவதும்,வாய் கிழிய கத்துவதும் வேடிக்கையான விடயம் என்பதை
நாம் உள்வாங்கியாக வேண்டும்.
இன்று வடக்கின் ஆட்சியினை கொண்டுள்ள
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி என்று கூறும் நல்லாட்சிக்கான அமைப்பும்
அதனது உறுப்பினரும், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எடுத்துள்ள
நடவடிக்கை என்ன என்று கேட்க விரும்புகின்றேன். இதனை எமது பார்வையில்
பூஞ்சியம் என்று தான் சொல்ல வேண்டும்.மன்னார் நானாhட்டானில் அமைந்துள்ள
பூவரசங்குளம் கிராமத்தில் முஸ்லிம்கள் தமது காணிகளில்
மீள்குடியேற்றத்துக்கு சென்ற போது (அங்கு முஸ்லிம்களின் மையவாடிகள்
இருக்கின்றது) இதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை அமைச்சர்களும்,
உறுப்பினர்களும் அங்குள்ள தமிழ் மக்களை தூண்டி முஸ்லிம்களுக்கு எதிரான
ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதன் பின்னர் இந்த பிரச்சினை பொலீஸ் நிலையம்
மற்றும் நீதிமன்றம் வரை சென்றது. அதன் பின்னர் அந்த முஸ்லிம்கள் தமது உயிர்
போனாலும் பரவாயில்லை தமது வாழ்விடத்தை விட்டு இனியும் அகதிகளாக இடம் பெயர
முடியாது என்ற உறுதியுடன்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர்,
அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் மற்றும் மாகாண
சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் பல
சுற்று பேச்சுக்களை முரண்பாடுகளுடன் இருந்த மக்களுடன் நடத்தினர்.
அங்கிருந்த பிரதேச செயலாளர் சந்திர அய்யா அவர்கள் இந்த காணிகள்
முஸ்லிம்களது என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்பித்த போதும்,
அவருக்கும் எதிராக இனச சாயம் பூசி அவரது செயலக அலுவலகத்தை சேதப்படுத்தியதை
இந்த நல்லாட்சி அமைப்பு மறந்து பேசுகின்றதே,
இது போல் மன்னார் மாவட்டத்தில்
மட்டுமல்லாது வவுனியாயவிவ் புலித்தறித்த புளியஙகுளம், சூடுவேந்தபுளவு
வவுனியா மன்னார் வீதியில் சாளம்பைக்குளம் பகுதிகளில் வாழ்ந்த மக்கள்
மீள்குடியேற்றத்திற்கு வந்த போது அந்தக் கிராமங்களும் தமிழ் கிராமம் என்று
சோபாள புளியங்குளம் என்று பெயரை மாற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட
அசிங்கத்தமான செயற்பாடுகளை இந்த அமைப்பு மறந்துவிட்டு செயற்படுகின்றதா? இது
போல் இந்திய அரசாங்கமும்,ஏனைய நிறுவனங்களும் இந்த மக்களுக்கு அன்பளிப்பு
செய்த வீடுகளை கூட நிர்மாணிக்க விடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு தடுத்ததை
இந்த அப்துர் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான அமைப்பு மறைத்துக் கொண்டு
இந்த மக்களை இன்னுமு; 20 வருடங்களுக்கு இந்த வீடுகளை நிர்மாணிக்க விடாது
தடுக்கும் அநியாயத்தை செய்ய வநதுள்ளனரா? இவ்வாறான நிலையில் அமைச்சர் றிசாத்
தனிமையில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுடன் குரல் கொடுத்த போது அவருக்கு
உதவியாக இந்த மக்களுக்கு ஆதரவாக ஒரு அனுதாப அறிக்கையினை விடுவதற்கு இந்த
நல்லாட்சிக்கான அமைப்புக்கு மனம் வரவில்லையே? அது மட்டுமல்லாமல் அரச
நியமனங்களை வழங்க முற்பட்ட போது அதிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படும்
அளவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிகளை செய்தனவே. 22 வருடங்களின்
பின்னர் தமது சொந்த மண்ணுக்கு வந்த முஸ்லிம்கள் தகுதியான இளைஞர்கள் அரச
நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட்ட போது அதற்கு எதிராக எத்தனை
ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.குறைந்த நியமனங்கள் முஸ்லிம்களுக்கு
வழங்கப்ட்டன. தமிழ்களும், சிங்களவர்களும் தமது நியாயமான நியமனங்களை எவ்வித
அநியாயமும் இன்றி பெற்றுக் கொண்டனர். அப்போதாவது இந்த நல்லாட்சிக்கான
அமைப்பு பங்களிப்பினை வழங்கியதா? என்று கேட்க விரும்புகின்றேன்.
இதே போல் முல்லைத்தீவு மாவட்டத்தில்
இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது பிரதேசங்களுக்கு வ்த போது
அவர்களது காணிகள் அபகரிக்கப்பட்டிருந்தன. அதற்கு மாற்றீடாக அரச
அதிபார்,பிரதேச செயலாளர்,காணி அமைச்சின் அதிகாரிகள்,பாதுகாப்பு உயர்
அதிகாரிகள் , பிரதேச பள்ளிவாசல் தலைமைகள்,மக்கள் பிரதி நிதிகள் என பலரும்
பல முறை கலந்துரையாடி முள்ளியாவலை பகுதியில் அடையாளப்படுத்தபட்ட
அரசகாணியினை வழங்க நடவடிக்கையெடுத்த போது,அதனை தடுத்து நிறுத்திய பெருமை
தமிழ் தேசிய கூட்டமைப்பிiனையே சாரும்.
இவ்வாறு முஸ்லிம்களின்
மீள்குடியேற்றத்திற்கு எதிராக தொடராக செயற்பட்டுவரும் இந்த தமிழ் தேசிய
கூட்டமைப்பின் கிளையான நல்லாட்சிக்கான அமைப்பு இன்று வந்து வடக்கு
முஸ்லிம்களை தமது அரசியல் லாபங்களுக்காக முஸ்லிம் தலைமைகள் பயன்படுத்துவதாக
கூறுவதை எவ்வாறு தன்மானமுள்ள வடக்கினை சேர்ந்த ஒருவரால்
சகித்துக்கொண்டிருக்க முடியும்.
இது இவ்வாறு இருக்கட்டும் என்று
விட்டுவிடுவோம்,அண்மையக் காலமாக மன்னார் மறிச்சுகட்டி தொடக்கம் முசலி எல்லை
வரை முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு
எதிராக பேசுபவர்கள் யார், தமிழ் தேசிய கூட்டமைப்பினை தமது கையில் வைத்து
சுழற்றும் மதவாதிகள் என்பதை மறந்து விட்டு இன்று இந்த அமைப்பு அவர்களது
ஆடைகளை அணிந்து கொண்டு அவர்களது வாகனத்தில் ஏறி வந்து, வடக்கு
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் திட்டமிடப்பட வேண்டும் என்று முதல்
ஆரம்பிக்க எடுக்கும் வேலையின் பின்னணி என்னவென்று எமது மக்கள் தெரிவிந்து
கொள்ள வேண்டும். ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்
தான் செய்வார்கள், மக்களுக்கு பணி செய்பவர்கள் ஒரு போதும் மக்களை ஏமாற்ற
மாட்டார்கள் என்பது நிதர்சனம். எதுவும் செய்யாதவர்கள் இன்று பசுந்தோலினை
புலியின் மீள் போர்த்திக் கொண்டு காட்டிக் கொடுப்புக்களுக்கான
அடித்தளத்தினை இடுவது வேதனைதருகின்றது.
இன்று வடக்கில் வாழும் முஸ்லிம்கள் இந்த
அரசாங்கத்தின் மூலம் நன்மைகளை பெறுகின்றனர். அது முஸ்லிமகளாக இருந்தால்
என்ன வேறு சமூகதர்தை சார்ந்தவர்களாக இருந்தால் என்ன? இது தான் யதார்த்தம்.
அரசாங்கத்தில் வடக்கிளைன பிரதி நிதித்துவம் செய்யும் கட்சிகளில் ஒன்று
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்
தேசிய கூட்டமைப்பினை பொறுத்த வரையில் அபிவிருத்தியினை புறக்கணித்து
செயற்படும் ஒரு கட்சி என்பதை நன்கு அறிவார்கள். பாதிக்கப்பட்ட தமிழ்
மக்களுக்காக உதயமான கட்சி என்றால் அம்மக்களது தேவைகளை பெற்றுக்
கொடுப்பதற்கு விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும். மத்தியல் மஹிந்தவின்
ஆட்சி இருக்கின்ற போது மத்திய அரசாங்கத்தின் ஒதுக்கீடுகளை ஒதுக்கிவிட்டு,
மஹிந்த அரசு தமிழர்களுக்கு எதுவும் செய்வதில்லை என்று போலியான விசமத்தான
பிராச்சாரங்களை உலக நாடுகளில் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் வடக்கில் குறிப்பாக
முஸ்லிம்களின் நலன் தொடர்பான தேவை விடயங்களை திட்டமிடுகின்ற பொறுப்பும்
தலைமைத்துவமும், முஸ்லிம் தலைமைகளுக்கே வழங்கப்ட வேண்டும். முஸ்லிம்கள்
விரட்டியடிக்கப்பட்ட போதும், அதன் பின்னர் தற்போது மீள்குடியேற்றத்துக்கு
வருகின்ற போது திட்டமிட்டு அதற்கு எதிரான மாயைகளையும், பொய்களையும் தமது
வாழக்கையாக கொண்டு செயற்படும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரிக் ஏஜெண்டாக
பல பெயர்களில் வன்னிக்குள் முகம் புதைத்திருக்கும இந்த நல்லாட்சிக்கான
அமைப்பு எமது மக்களுக்கு அழிவினையும், இழப்பினையும், ஏன்
காட்டிககொடுப்பினையுமே பரிசாக கொடுக்கும் ஒன்று என்பதை மக்கள் புரிந்து
கொள்வார்கள்.
சத்தியமும்,யதாரத்தமும், இன்சா அல்லாஹ் வெற்றி பெறும் ஒரு நளைக்கு…..
