Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, November 1, 2014

ஐ.நா.மனித உரிமை குழு ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது: இலங்கை குற்றச்சாட்டு




கடந்த 2006-ம் ஆண்டு இலங்கையின் திரிகோணமலை நகரில் தமிழ் மாணவர்கள் 5 பேர் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டனர். இது பற்றி இலங்கை அரசு நடத்திய விசாரணை குறித்து ஐ.நா. மனித உரிமைக் குழு ஒரு அறிக்கையை ஐ.நா. சபையில் அண்மையில் தாக்கல் செய்தது. அதில், தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டது பற்றி, இலங்கை அரசு சரிவர விசாரணை நடத்தவில்லை என்றும் மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக போதிய ஆதாரங்களையும் தரவில்லை என்றும் குறை கூறி இருந்தது. 



ஐ.நா.மனித உரிமை குழுவின் இந்த அறிக்கைக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி இலங்கை அரசின் தகவல் துறை மந்திரி கேஹெலியா ரம்புக்வெல்லா கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், “இலங்கையில் 30 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போரில் விடுதலைப்புலிகள் நடத்திய கொடுமைகளையெல்லாம் மறைத்துவிட்டு ஐ.நா.மனித உரிமைக் குழு ஒரு தலைப்பட்சமாக இது போன்ற அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. 1990-ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் 700 போலீசார் கொல்லப்பட்டனர். அதை இவர்கள் குறிப்பிடவில்லை. இதுபோன்ற 101 சம்பவங்களை எங்களால் குறிப்பிட்டு கூற முடியும்“ என்று குறிப்பிட்டார்.