இந்தியாவுக்கு வரப் போகும் ஆஸ்திரேலிய யுரேனியம்! காரணம், ஒசாமா பின் லேடன்!!!
இன்று இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் மும்பை, டெல்லி என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அடுத்த சில நாட்களில் நாடு திரும்பியிருப்பார். ஆனால், இவரது வருகையால் இந்தியாவின் மின் உற்பத்தியில் அடுத்த சில ஆண்டுகளில் மாபெரும் மாற்றம் வரப் போகிறது என்பது தான் இவரது வருகையை உற்று நோக்க வைத்திருக்கிறது. என்னயா ஓவரா பில்ட்-அப் காட்ற என்று நினைக்காதீர்கள்...
உலகின் 40% யுரேனியம் ஆஸ்திரேலியாவில்: இந்தியாவின் பெரும்பாலான அணு உலைகள் யுரேனியத்தை நம்பி இருப்பவை. உலகிலேயே மிக அதிகமான யுரேனியத் தாது நிரம்பிய நாடு ஆஸ்திரேலியா தான். அதாவது உலகின் மொத்த யுரேனியத்தில் சுமார் 40 சதவீதம்.