Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, September 9, 2014

மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள்-கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த 15 அருமையான வழிகள்!!!



நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பலப்பல! சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்!!! 



அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு கல்லீரல் நோய் என்று பெயர். இந்த நோய் ஏற்படுவதை உடல் நலக் குறைவு, வாந்தி, மயக்கம், களைப்பு, எடை குறைவு ஆகிய பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. 

கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!! கல்லீரல் முழுவதுமாக செயலிழந்தால் மாற்றுக் கல்லீரல் பொருத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. கல்லீரலுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை சில எளிமையான வழிகளின் மூலமே குணப்படுத்தி விடலாம். அவைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். 

ஆப்பிள் சீடர் வினிகர் ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம். தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.

நெல்லிக்காய் வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.


அதிமதுரம் சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.

மஞ்சள் தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.