Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, April 27, 2014

புத்தளத்தின் முதல் முன்பள்ளி-ஜ.எப்.எம். பதிவு

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் முன்பள்ளிகள் என்று எதுவுமே இல்லாத காலகட்டத்தில் 1972.04.02 அன்று ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் நகரின் முதலாவது முன்பள்ளியான புத்தளம் மூன்றாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ஐ.எப்.எம்.முன்பள்ளியின் 42 ஆவது வருட நிறைவும், அதன் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகளும் மே மாதம் 03 ஆம் திகதி மாலை 04 மணிக்கு புத்தளம் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பூங்காவில் மிக விமரிசையாக இடம்பெறஉள்ளது.
மா, பலா ஆகிய இரு இல்லங்களை சேர்ந்த 27 முன்பள்ளி மழலைகள் தமது பென்னம்பெரிய திறமைகளை மைதானத்தில் வெளிக்கொணரள்ளனர். 50 மீட்டர் ஓட்டம், டொபி சேகரித்தல்,போத்தலில் நீர் நிறைத்தல்,பந்து மாற்றுதல், யோகட் சாப்பிடுதல், நிறம் தீட்டுதல், பழம் பொறுக்குதல், பூ கோர்த்தல்,சாக்கு ஓட்டம், கால் கட்டி ஓட்டம், தேசிக்காய் கரண்டி ஓட்டம், சீருடை அணிதல், சங்கீத கதிரை, பழைய மாணவர் ஓட்டம் மற்றும் பெற்றார்களுக்கான போட்டி என்பன இடம்பெறஉள்ளன.


ஐ.எப்.எம். முன்பள்ளியில் கடந்த 28 வருடங்களாக இன்று வரை தொடர்ந்து ஆசிரியையாக கடமையாற்றும் எம்.எஸ்.பௌசுல் ரூசி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர 45 முன்பள்ளிகளை நிர்வகிப்பவரும், ஐ.எப்.எம்.மத்ரஸாவின் பழைய மாணவரும், புத்தளம் நகர முதல்வருமான கே.ஏ.பாயிஸ் கலந்து கொள்வார். சமய தலைவர்கள், கல்வி அதிகாரிகள், புத்தி ஜீவிகள், முன் பள்ளிகளின் ஆசிரியைகள், முப்படைகளின் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், அதிபர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
போட்டிகளுக்கு பிரதம நடுவராக முன்னாள் உதைப்பந்தாட்ட பீபா நடுவரும், வைத்தியருமான ஏ.எச்.எம்.நாளிர் கடமையாற்றுவார். துணை நடுவர்களாக உடற்கல்வி போதனாசிரியர்களான எம்.எப்.எம்.ஹுமாயூன், எம்.எப்.எம்.துபைல், ஜே.எம்.இனூஸ், என்.எம்.சிபாக் ஆகியோர் கடமையாற்ற உள்ளனர்.
போட்டிகளில் வெற்றி பெறும் மழலைகளுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட உள்ளதோடு போட்டிகளில் பங்கு பற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
தமது வாழ்நாளில் முதன்முதலாக மைதானத்தில் திறமையை வெளிக்காட்ட இருக்கும் மழலைகளை உற்சாகப்படுத்த அனைத்து சகோதரர்களையும் வருகை தருமாறு ஐ.எப்.எம். முன்பள்ளியின் 2014 ஆம் ஆண்டுக்கான பெற்றார் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.