கதிர்காமம், திஸ்ஸ வீதியில் தெட்டகமுவ வாவிக்குள் வானொன்று இன்று சனிக்கிழமை அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வானிலிருந்து ஐந்து வயது சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் வேறுயாராவது இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தேடப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.