Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, March 12, 2014

ஜக்கிய தேசிய கட்சியினர் மீது தாக்குதல் சம்பவம்

மற்றுமொரு தேர்தல் வன்முறைச் சம்பவமாக அங்குருவதொட, யால சந்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலருடனான  வாக்குவாதத்தை தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (11) கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  



ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரான கித்சிறி கஹடட்டபிட்டியவின் புதல்வர் மலித் கஹட்டபிட்டிய என்பவரே  பாதிக்கப்பட்டுள்ளார்.  

உடனடியாக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.