Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, March 12, 2014

அலாவுதீன் ஹில்மியினை காணவில்லை-தகவல் தெரிந்தவர்கள் கூறவும் பொலீஸார்

புத்தளம் தில்லையடி காசிம் சிட்டி என்ற முகவரியினை வசிப்பிடமாகக் கொண்ட அலாவுதீன் முஹம்மத் ஹில்மி (வயது 46) இரு பிள்ளைகளின் தந்தையினை நேற்று  செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை என புத்தளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் இவரை காணவில்லையென அவரது குடும்பத்தினர். இன்று  புதன்கிழமை காலை புத்தளம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் புத்தளம் பொலீஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.