வடமேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில்
மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வாய்க்கால் நோயினை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,இதனை முற்றாக இல்லாமல் செய்யும் வரை வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கமைய உள்ளுராட்சி மன்றங்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் வடமேல் மாகாண விவசாய,மீன்பிடி,கால் நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி,சிறு நீர்ப்பாசன.கமத் தொழில் அமைச்சர் சனத் நிசான்த பெரேரா கேட்டுள்ளார்
இன்று சிலாபம் பீச் ஹோட்டலில் இடம் பெற்ற தமது அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும்
செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஊடகவியளாலர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாகாண அமைச்சர் சனத் நிசான்த பெரேரா –
புத்தளம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கிராமங்களில் இந்த நோயினை தாக்கம் தொடர்பில் எமக்கு தகவல் கிட்டியதும்,எமது வைத்திய குழு அங்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.இதனால் இதனது பரம்பலை கட்டுப்படுத்த முடிந்தது இது ஒரு வகையான வைரசுவினால் ஏற்படும் நோயாகும்.இதனது தொற்றலை தடுக்கவே மாடு,ஆடு ,பன்றி போன்றவற்றை அறுப்பதும்,ஏற்றிச் செல்வதும் தற்காலிகமாக தடை விதித்துள்ளோம்.இன்னும் சில காலங்களுக்கு இதனை நடை முறைப்படுத்துவது
மக்களுக்கு பயனளிக்கும் ஒன்றாகவே கருதுகின்றோம்.
அதே வேளை வடமேல் மாகாணத்தில் பால் உற்பத்தியினை மேம்படுத்துவது தொடர்பிலும்,ஒழுங்கமைப்பான இறால் உற்பத்திகளை மேற்கொள்வலது தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றது.கடந்த காலங்களில் இறால் பண்ணைகளை ஆக்கிரமித்த வெண்புள்ளி நோயினால் நாம் பெரிதும் வெளிநாட்டு வருமதனத்தை இழந்துவிட்டோம்.இதனால் இறால் பண்யைாளர்கள் நஷ்டவாளிகளாக மாறியுள்ளனர்.
வடமேல் மாகாணத்தின் மேற்படி அமைச்சுக்களை பொருப்பேற்றதன்
பின்னர் புத்தளம்,குருநாகல் மாவட்டங்களில் விவசாயத்துறைக்கு
தேவையான உதவிகளை செய்துவருகின்றேன்.
புத்தளம் கொட்டுகச்சி பண்ணையினை பாதுகாக்க வேண்டியுள்ளது.அது எமது எதிர்கால சமூகத்தின் சொத்தாகும்.சிலர் இந்த பண்ணைக்கான காணிகளை சட்ட ரீதியற்ற முறையில் பிடித்துள்ளார்கள்.அது குறித்து தாற்போது நாம் நடவடிக்கையெடுத்துள்ளோம். என்றும் அமைச்சர் சனத் நிசான்த பெரேரா கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சின் செயலாளர் விஜித பண்டார உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கமத்தொழில் துறையினை மேலும் ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவுகளையும்
அமைச்சர் இதன் போது வழங்கி வைத்தார்.