தெஹிவளை, தாருஸ் ஷாபி பள்ளிவாசலில் தொழுகை மற்றும் குர்ஆன் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தும்படி கங்கொடவில நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தீர்ப்பின் மேன்முறையீட்டு தீர்ப்பு வெள்ளிக்கிழமை (07), முஸ்லிம்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ளது.
கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்தை வீதி தாருஸ் ஷாபி பள்ளிவாசலில் தொழுகை மற்றும் குர்ஆன் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தும்படி கங்கொடவில நீதவான் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுஹைரின் வழக்கறிஞர்களால் மேன்முறையீடு செய்யப்பட்டது.