Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, March 7, 2014

551 பேருக்கு ஓரு போலீஸ் தான் பாதுகாப்பு

புதுடில்லி: இந்தியாவில் வசித்து வரும் மக்களில் 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறைசெயலாளர் அனில் கோஸ்வமாமி வெளியி்ட்டு்ள்ள அறிக்கையி்ல் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் கூறியதாவது: நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 15.38 சதவீதமாக உள்ளது. அதேசமயம் போலீசாரின் வலிமை 0.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2002-ம் ஆண்டில் 718 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலை மாறி 2012-ம் ஆண்டு 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலை காணப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 2002-ல் போலீசாரி்ன் எண்ணிக்கை 3.48 லட்சம ஆக இருந்தது. அவை 2012-ம் ஆண்டில் 4.62 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் , வகுப்புவாத வன்முறை போன்றவை அதிகரித்துள்ளதும் ஒரு காரணமாகும் என தெரிவித்துள்ளார். 


போலீஸ் ஆராய்சி மறறும் மேம்பாட்டு கழகத்தின் அறிக்கை படி 2002-ல் 100 சதுர கிலோ மீட்டருக்கு 46.39 போலீசார் என்ற நிலை மாறி 2012-ல் அவை 69.76 ஆக அதிகரித்துள்ளது. 
புவியியல் அடிப்படையில் 1.43 சதுர கி.மீ., தூரத்திற்கு ஒரு போலீஸார் பாதுகாப்பு வேண்டும். ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் அவை 50.38 சதவீதம் அதிகரித்துள்ளது. 

No comments:

Post a Comment