இலங்கைக்கான கோப்பியோ கல்வி குழு ஏற்பாடு செய்துள்ள இந்தியாவில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை தெளிவுப்படுத்தும் செயலமர்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை 10.00 மணிக்கு நுவரெலியா திரித்துவ கல்லூரியில் நடைபெற உள்ளதாக அமைப்பின் இணைப்பு செயலாளர் ஆர்.விஜயலிங்கம் தெரிவித்தார்.
இலங்கையில் 2013ஆம் ஆண்டு உயர்தர பரிட்சையில் அனைத்து பாடங்களிலும் 60 வீதத்திற்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இந்த செயளமர்வில் கலந்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலவசமாக நடத்தப்படும் இந்த செயலமர்வு பெருந்தோட்ட மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதால் தகுதியான அனைவரும் கலந்து பயன் பெறும்படியும் அவர் ஏற்பாட்டு குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment