Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, March 17, 2014

கலாசார நிலையங்கள் மூலம் இன உறவை கட்டியெழுப்பலாம்-அமைச்சர் டீ.பீ.ஏக்கநாயக்க கூறுகின்றார்

இனப் பிரச்சினைக்கு சிறந்ததொரு தீர்வாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் கலாச்சார மையங்களை ஏற்படுத்தி அதன் மூலம் இன ஒற்றுமையினை ஏற்படுத்துவது என்று கற்றரிந்தத பாடங்கள் ஆணைக்குழுவின் பரி்ந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வகையில் கலை என்பது கலைஞர்களுக்கு மட்டும் ஒன்று என்பதல்லாது அது சகலதுக்கும் தொடர்பினை கொண்டுள்ளது என்று கூறுவதே பொருத்தமாகும் என கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் டீ.பீ.ஏக்கநாயக்க ஆனமடுவவில் தெரிவித்தார்.


ஆனமடுவவில் அமைந்துள்ள பள்ளம பிரதேச செயலகத்தில்  நவீன ரீதியில் நிர்மானிக்கப்பட்ட கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த புதிய கலாசார நிலையத்தை அமைப்பதற்கென அரசாங்கத்தினால் 13000000 ரூபா  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க இங்கு உரையாற்றும் போது –
கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளுக்கமைய இதுவரையில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மட்டக்களப்பு,அம்பாறை, போன்ற மாவட்டங்களில் கலாசார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதன் மூலம்,பௌத்த,இந்து,இஸ்லாம்,கத்தோலிக்க மதங்களின் கலாசாரங்களை மீண்டும் இந்த நாட்டில் கட்டியெழுப்பக் கூடியதாக உள்ளது.இந்த நிலையில் இனங்களுக்கிடையில் நற்புத் தன்மையினை தோற்றுவித்துள்ளதை மகிழ்வுடன் நினைவு கூறவிரும்புகின்றேன்.
இன நற்புத்தன்மையினை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் எப்போதும்,எம்மை அறிவூட்டிக் கொண்டே இருக்கின்றார்.இதன் மூலம் எமது புதிய தேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்கின்ற ஆழ்ந்த நம்பிக்கையினை ஏற்படுத்திவருகின்றார்.தற்போதைய காலத்தில் கலாச்சார ரீதியிலான அபிவிருத்திகள் ஒரு புறம் செல்கையில் மறுபுரம் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.அதனை எதிர்கட்சிகளினால் சகித்துக்கொண்டு இருக்க முடியாத நிலையுள்ளது.
பாராளுமன்றத்தில் அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியினர் கேள்வி கேட்டனர்.நுகேகொடையில் உள்ள வான்பாலத்தில் எத்தனை ஆணிகள் உள்ளது என்று,அந்த அளவுக்கு அவர்கள் அரசியல் ரீதியில் வங்ஞரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.இது தான் இன்றை எதிர்கட்சிகளின் நிலையென்றும் அமைச்சர் டீ.பீ.ஏக்கநாயக்க இங்கு கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன,புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்ணான்டோ,ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.