சிலாபம் கடல் பிரதேசத்தில்
தடைசெய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிக்க முற்பட்ட மீனவர்களை சுற்றி வளைக்கும் தேடுதலினை
மஹாவெவ கடற்றொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதன்
போது சிலாபம் தொடுவாய் பிரதேச கால்வாய் அலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான
வலையினை அதிகாரிகள் கைப்பற்றினர்.
1996 ஆம் 2 ஆம் இலக்க கடற்றொழில் சுற்று நிருபத்திற்கமைய
தங்கூஸ் வலை கொண்டு மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டது.இந்த நிலையில் இதனை கொண்டு மீன்டிபிடிக்க
இருந்த தங்கூஸ் வலைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு மாவட்ட நீதி மன்றில் பாரப்படுத்தப்படவுள்ளது.
இந்த சுற்றி வளைப்பினை
மஹாவெவ உதவி கடற்றொழில் பணிப்பாளர் விக்ரமசிங்க தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.