மாதம்பை-சுதுவெள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள
பழைய இரும்புகளை கொள்வனவு செய்து அதனை மீள் உற்பத்தி செய்யும் கைத்தொழில் தொழிற்சாலையொன்றில்
பணியாற்றும் இந்திய ஊழியர்கள் தங்களை மீள தமது நாட்டுக்கு அனுப்புமாறு இந்திய உயர்
ஸ்தானிகர் ஆலய அதிகாரிகளிடம் வேண்டியுள்ளனர்.இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான இந்த
தொழிற்சாலையில் இந்திய ஊழியர்கள் 300 பேர்கள் மற்றும் இலங்கை ஊழியர்களும் பணியாற்றுகின்றனர்.
பழைய இரும்புகளை உருக்கும் பிரிவில் பணியாற்றும் 60
ஊழியர்கள் கடந்த 10 ஆம் திகதி முதல் பணிபகிஷ்கரிப்பினை மேற்கொண்டுவருகின்றனர்.கடந்த
3 மாதங்களாகியும் தமக்கான வேதனத்தை இந்த நிறுவனம் வழங்கவில்லயென்றும் இது
தொடர்பில் நிர்வாகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையினையடுத்து 5000
ரூபாவுக்கான உணவு மட்டும் வழங்குவதாகவும் மீண்டும் பணியில் இணையுமாறு ஊழியர்களை
நிர்வாகம் கேட்டுள்ளதாக பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ள ஊழியர்கள்
தெரிவித்தனர்.அதற்கு தாங்கள் உடன்படப் போவதில்லையென்றும் எமக்கான வேதனம் உரிய
முறையில் கிடைக்கும் வரை பகிஷ்கரிப்பு தொடரும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த பகிஷ்கரிப்பினால் கைத்தொழில் சாலையின் ஏனைய
பிரிவுகளின் பணிகள் முடக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊழியர்கள் தெரிவித்தனர்.இந்த
தொழிற்சாலைக்கு கணரக லொறிகளில் கொண்டுவரப்பட்டுள்ள பழைய இரும்புகள் தொழற்சாலைக்கு
முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமக்கான வேதனத்தை வழங்கி மீண்டும் தங்களை இந்தியாவுக்கு
அனுப்பி வைக்குமாறு இந்திய துாதரகத்தினை கேட்டுள்ள ஊழியர்கள்,தங்களது கடவுச்
சீட்டினையும் நிர்வாகத்தினர் வைத்துள்ளதால் பெரும்
அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை ஊழியர்கள்
தொழிற்சாலைக்கு முன்பாக பகிஷ்கரிப்பு மேற்கொண்டனர்.
.jpg)