கைது செய்யப்பட்ட நபரொருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் பொலீஸ்
நிலையத்தில் தடுத்து வைத்த சம்பவம் தொடர்பில் கிரிவுல்ல பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி,குற்றத்தடுப்பு
பிரிவு பொறுப்பதிகாரி உள்ளி 5 பொலீஸாரின் சேவைகள் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.
கிரிவுள்ள-முதுகல
பிரதேசத்தை சேர்ந்த .ஏ.சிறிசேன என்பவரை கைது செய்த பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி
உட்பட ஏனைய பொலீஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட
விசாரைணயினையடுத்து மேற்படி பொலீஸ் அதிகாரிகளின் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.பொலீஸ்
மா அதிபரின் பணிப்புரைக்கமைய சிலாபம் பிரதேச சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் சாலிய
சில்வாவினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.சிஷே்ட பொலீஸ் அத்தியட்சகரின்
பணிப்புரைக்கமைய குளியாப்பிட்டி உதவி பொலீஸ் அத்தியட்சகர் ஆனந்த சேரசிங்க பணி இடை
நிறுத்தத்திற்கான பணிப்புரையினை வழங்கினார்