Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, February 4, 2014

விக்னேஸ்வரண் அய்யா வடமாகாணத்துக்கு கிடைத்த வளம் என்கிறார் அமைச்சர் றிசாத்

வடமாகாண முதலமைச்சர் ஒரு சிறந்த அனுபவசாலி அவர் வடமாகாண முதலமைச்சராக தரிவு செய்யப்பட்டுள்ளது.எமது மாகாணத்திற்கு கிடைத்த வளமாகும்.சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றவர்,நீதி செலுத்தக்  கூடிய ஒரு நீதயரசருமாவார்.எமது மக்களின் நலன் குறித்து எடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் எமது ஒத்துழைப்பு இருக்கின்றது.முதலமைச்சராக வந்துள்ள விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு போதும் நினைத்திருக்கமாட்டார் ஒரு அரசியல் வாதியாக வருவேன் என்று அவ்வாறு தான் நானும் இடம் பெயர்ந்து எனது குடும்பத்துடன் அகதி முகாமில் வாழ்ந்து கல்வி கற்று ஒரு பொறியிலாராக மாறினேன்.அன்றைய காலத்தின் ஓட்டம் மக்களது அவலம் என்னையும் அரசியலுக்குள் இழுத்துவந்தது.கடந்த 13 வருட காலமாக இம்மக்களுக்கு எனது பணி சென்றடைகின்றது.


முல்லைத்தீவிலிருந்து இடம் பெயரந்து வவுனியா  மெனிக் பார்முக்கு வந்த மக்களது தேவைகளை அன்று நான் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சராக இருந்த போது  நிறைவேற்றிக் கொடுததோன்..இம்மக்களுக்கு உதவி செய்வதில் இரவு பகல் பாராது வவுனியா நகர சபை,செட்டிக்குளம் பிரதேச சபை,வவுனியா தமிழ் பிரதேச சபையின் ஊழியர்கள் செயற்பட்டதை நான் இன்றும் நன்றியுயுணர்வுடன் நினைவு கூர்கின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன்,சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண ஆளுநரின் ஆணையாளர்  ஷாஹிப் மொஹிதீன் ,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்




No comments:

Post a Comment