Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, February 4, 2014

அமைச்சர் றிசாதினால் முடியும் வடக்கில் இன உறவை ஏற்படுத்த- முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிப்பு

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மையக் காலமாக ஏற்பட்டுவரும் கத்தோலிக்க –முஸ்லிம்,சிங்கள-முஸ்லிம்,தமிழ்-சிங்களவர்களுக்கிடையலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுப்பாரெனில் அது சாத்தியமாகும்,ஏனெனில் உலகில் உள்ள முஸ்லிம் தலைவர்களில் 500 க்குள் ஒருவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதிலிருந்து அவரது ஆளுமையினை புரிந்து கொள்ள முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா நகர மண்டபத்தில் இன்று மாலை இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரைாயற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


மேலும் முதலைமச்சர் தமதுரையில் கூறியதாவது –
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் சகோதரர் வடமாகாண சபையின் உறுப்பினராக இருக்கின்றார்.எம்மால் சபைக்கு கொண்டுவரப்படும் பிரேரணைகள் தொடர்பில் அவரது திருத்தங்களையும் முன் வைக்கின்றார்.அவை உள்வாங்கப்பட்டதன் பிற்கு எமக்கு ஆதரவை நல்குகின்றார்.அதே போன்று அமைச்சர் றிசாத் பதியுதீனும் எமது வடமாகாண சபையின் அனைத்து திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவினை வழங்குவார் என நம்புகின்றேன்.
அண்மையில் ஜனாதிபதி அவர்களை நான் சந்தித்த போது,வடமாகாணத்தின் நியமனங்கள் தொடர்பில் கலந்து பேசினேன்.சிலர் தகைகை குறைந்தவர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்ற போது,அதன் தகைமைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டு்ம் என்பதை ஜனாதிபதி எடுத்துரைத்தார்.இருந்த போதும் அந்த தகைமைகளுடன் நீண்ட கால அனுபவமும் தகைமையாக கருதி இந்த நியமனம் இன்று வழங்கப்படுகின்றது.அதற்கு உதவி செய்த ஆளுநருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிலருக்கு இந்த நியமனம் வழங்கப்படவில்லை என அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இப்போது என்னிடம் கூறினார்.அவர்களது விபரங்களை பெற்று காலதாமதம் ஆனாலும் நியமனங்களை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்றார்.





No comments:

Post a Comment