Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, August 28, 2013

செங்­குத்­தாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பசுமைத்தோட்டம் (படங்கள்)

10 ஆயி­ரத்­திற்கு அதி­க­மான தாவ­ரங்­க­ளைக் ­கொண்டு பிரித்­தா­னி­யாவின் மத்­திய லண்­டனில் 68 அடி உய­ரான சுவரில் செங்­குத்­தான தோட்டம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செங்­குத்­தான பசு­மைத் தோட்­ட­முள்ள சுவர் விக்­டோ­ரியா ஸ்டேஷ­னுக்கு அண்­மையில் உள்­ளது. கண்­க­வரும் வகை­யி­ல­மைந்­துள்ள செங்­குத்து தோட்­டத்­தினால் கடும் மழை­கா­லத்தில் மத்­திய லண்­டனில் வெள்ளம் ஏற்­ப­டு­வ­தனை தவிர்க்க முடியும் என வல்­லு­நர்கள் தெரி­வித்­துள்­ளனர். 10 ஆயி­ரம் தாவ­ரங்­களில் பட்­டர்கப்ஸ், ஸ்டோபரி என 20 பரு­வ­கால தாவ­ரங்கள் உள்­ளதாம்.

இத்­திட்­ட­மா­னது லண்டன் மேயர் பொரிஸ் ஜோன்­ஸனால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. தலை­ந­கரின் சூழல் சவால்­களை எதிர்­கொள்ளும் நோக்­கி­லேயே இத்­தோட்டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. கெரி க்ரேன் ஒப் க்ரீன் ரூப் கொன்­ஸல்டிங் எனும் நிறு­வ­னத்­தினால் வடி­வ­மைக்­கப்பட் இச்­சு­வரை ட்ரீபொக்ஸ் எனும் நிறு­வனம் பாரா­ம­ரிக்­கின்­றது.  இது குறித்து ட்ரீபொக்ஸ் நிறு­வ­னத்தின் முகா­மை­யாளர் ஆர்­மன்டோ கூறு­கையில், வருடம் முழு­வதும் இச்­சுவர் பூத்­துக்­கு­லுங்கும். பற­வைகள், வண்­ணத்­துப்­பூச்­சிகள், வண்­டுகள் என உயிரின் பல்­வ­கை­மையும் விக்­டோ­ரி­யாவில் பேணப்­படும்.
செங்­குத்­தாக அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பசுமைத்தோட்டம் (படங்கள்)green house1green house2
உயிர்ப்­பல்­வ­கை­மையை இது ஊக்­கு­விக்க உதவும். அத்­துடன் சுற்­றுச்­சூ­ழலும் இயற்­கையாக மாறும் எனத் தெரி­வித்­துள்ளார். இதற்கு முதல் இதே­போன்­ற­தொரு 2005ஆம் ஆண்டு ஐலிங்டன் நகரில் உருவாக்கப்பட்டது. ஆனால் நீர் வழங்கல் முறைகள் திருப்தியளிக்காமல் தாவரங்கள் இறக்க அத்திட்டம் முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment