யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் நேற்று (27.08.13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தொடர்புடைய அங்கையனின் தந்தை இராமநாதனை இன்று மாலைக்குள் கைது செய்யாவின் தேர்தலில் இருந்து ஒதுங்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் அறுவர் அறிவித்துள்ளனர்.
சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயனின் தந்தையார் இராமநாதன் நேற்று (27.08.13) இரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வேட்பாளரான சர்வானந்தன் என்பவரது ஆதரவாளரொருவர் படுகாயமடைந்தார்.
ஜக்கிய தேசியக்கட்சி சார்பில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு சாவகச்சேரி நகர சபையில் வெற்றி பெற்றிருந்த சர்வானந்தன் இம்முறை ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் இணைந்து மாகாணசபை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
கொடிகாமத்தினை சேர்ந்த சர்வானந்தன் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துருசிங்கவின் நெருங்கிய சகாவென்பதால் படைத்தரப்பினது செல்வாக்கை அதிகம் கொண்டுள்ளார்.
இந்நிலையில் கொடிகாமம் பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அங்கயன் குழு தொடர்ச்சியாக சர்வானந்தன் குழுவை சீண்டி வந்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று கொடிகாமம் பகுதியில் மூண்ட இருதரப்பு மோதல் சாவகச்சேரி வரை இரவு தாண்டியும் நீடித்திருந்தது.பரஸ்பரம் வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் அங்கயனது தந்தையாரான இராமநாதன் தன் வசமிருந்த கைத்துப்பாக்கியினால் சர்வானந்தன் தரப்பு மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவத்தில் சர்வானந்தன் தரப்பு ஆதரவாளர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இது குறித்து முழுமையான விசாரைணைகளை மேற்கொண்டு இன்று மாலைக்குள் இராமநாதன் கைது செய்யப்படாவிட்டால் தாம் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக தேர்தலில் போட்டியிடும் சர்வாணந்தன், ரெமீடியஸ், அகிலதாஸ், பொன்னம்பலம், உள்ளிட்ட ஆறுபேர் தெரிவித்துள்ளனர்.
யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற இன்றைய ஊடக மகாநாட்டில் இது குறித்து அறிவித்த இவர்கள், யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று விசாரணை இடம்பெற்ற போதும் அங்கையனும் தந்தை ராமநாதனும் கௌரவ விருந்தினர்களாகவே பொலிஜாரால் அனுசரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். எனினும் தாம் மர நிழல் ஒன்றின் கீழ் வைத்து விசாரிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment